»   »  ரஜினி படத்தை இயக்கிய பிறகே, சூர்யாவை இயக்கட்டும்!- ரஞ்சித்துக்கு அனுமதி தந்த ஸ்டுடியோ கிரீன்

ரஜினி படத்தை இயக்கிய பிறகே, சூர்யாவை இயக்கட்டும்!- ரஞ்சித்துக்கு அனுமதி தந்த ஸ்டுடியோ கிரீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி படத்தை முடித்த பிறகே, எங்கள் நிறுவனத்துக்கு ரஞ்சித் படம் பண்ணித் தருவார் என்று ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

சூர்யாவின் நடிப்பில் ஒரு படத்தையும், மற்றொரு முன்னணி நடிகரின் நடிப்பில் இன்னொரு படத்தையும் அடுத்தடுத்து இயக்கித்தருவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்திருந்தாராம்.

இக்கட்டு

இக்கட்டு

இந்த நேரத்தில்தான் ரஜினியின் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் ஞானவேல் ராஜாவிடம் ஒப்பந்தம் செய்துகொண்டதால் ரஞ்சித்துக்கு பெரும் இக்கட்டு.

அனுமதி

அனுமதி

விஷயத்தை ஞானவேல்ராஜாவிடம் சொன்னபோது, மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் முதலில் ரஜினியின் படத்தையே இயக்குங்கள் என்று கூறிவிட்டாராம்.

அரிய வாய்ப்பு

அரிய வாய்ப்பு

இது குறித்து ஞானவேல்ராஜா கூறுகையில், இரண்டு படங்கள் இயக்கித்தருவதாக எங்களிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மைதான். ஆனால் ரஜினி படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்ததும், அந்த அரிய வாய்ப்புக்குக் குறுக்கே நிற்க நாங்கள் விரும்பவில்லை. ரஜினி படத்தை முடித்துவிட்டுத்தான் ரஞ்சித் எங்கள் படத்தை இயக்குவார்," என்றார்.

நிம்மதி - மகிழ்ச்சி

நிம்மதி - மகிழ்ச்சி

இதனால் ரஞ்சித்துக்கு பெரும் நிம்மதி. ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பும், அதற்கு தடையாக இருந்த விஷயம் எந்த சர்ச்சையுமின்றி விலகிய

ரஜினி படத்தை இயக்கிய பிறகே, சூர்யாவை இயக்கட்டும்! - ரஞ்சித்துக்கு அனுமதி தந்த ஸ்டுடியோ கிரீன்

ரஜினி படத்தை முடித்த பிறகே, எங்கள் நிறுவனத்துக்கு ரஞ்சித் படம் பண்ணித் தருவார் என்று ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Studio Green Gnanavel Raja has gave green signal to director Ranjith who is in a contract with earlier, to complete Rajinikanth's movie first.
Please Wait while comments are loading...