twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நண்பேன்டா வசனம் சினிமாவுக்கு மட்டும்தான் நிஜத்தில் அது உதவாது - இயக்குநர் அமீர்

    |

    சென்னை: சினிமாவில் வெற்றியும் புகழும் நிரந்தரம் இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.

    சினிமாவில் நிரந்தர நண்பனும் - எதிரியும் கிடையாது என்று சொல்வார்கள். பிரபலங்கள் பற்றி நாம் தினமும் கேள்விப்படும் விஷயங்களும் அப்படி தான் இருக்கிறது.

    Success and fame are not permanent in cinema-Director Ameer


    கேப்டன் விஜயகாந்தின் நண்பரான அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் 21ஆம் தேதி நடந்தது.

    இப்ராஹிம் ராவுத்தர் என்றாலே இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு உதவுபவர் என்று அனைவரும் தெரிந்ததே. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் இப்போது ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.

    துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய நினைத்த பவன்: காப்பாற்றிய நடிகர் சிரஞ்சீவி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய நினைத்த பவன்: காப்பாற்றிய நடிகர் சிரஞ்சீவி

    ஆரிக்கு ஜோடியாக இலங்கையை சேர்ந்த சாஷ்வி பாலா நடித்துள்ளார். மேலும், மொட்டை ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கவிராஜ் இயக்கியுள்ளார். மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மகன் முகமது அபுபக்கர் தயாரிக்கிறார்.

    கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கும் இப்படத்திற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இயக்குனருக்கு சகல விதத்திலும் லக்ஷ்மன் உதவி இருக்கிறார்.

    விழாவில் பங்கேற்ற பிரபல இயக்குநர் அமீர் தனது நண்பரான இயக்குநர் பாலாவுடனான நட்பு முறிந்தது குறித்து மேடையில் பேசினார்.

    அவர் பேசுகையில், புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு கேப்டன் என்று அடைமொழி வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் இப்ராஹிம் ராவுத்தர் தான். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள். சினிமா அவர்களைப் பிரித்து விடும்.

    அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம், என்றார்.

    நண்பேன்டா என்ற வசனம் சினிமாவுக்கு தான் நன்றாக இருக்கிறதே தவிர நிஜ வாழ்க்கையில் கஷ்டமாக தான் இருக்கிறது. தொடர்ந்து பேசிய அமீர், திரைத்துறையில் புகழும் வெற்றியும் நிரந்தரமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

    சினிமாத்துறையில் இருப்பவர்கள் அதைப் புரிந்துக் கொண்டு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆகையால், நீங்கள் வெற்றியடைந்தபின், நீங்கள் யாரால் வெற்றி பெற்றீர்களோ அவர்களையும் கைத்தூக்கி விடுங்கள். அது தான் நீங்கள் பெற்றி உண்மையான வெற்றி, முழுமையான வெற்றி என்று அழுத்தமாக பேசினார்.

    பல காயங்களை தாண்டி தான் ஒரு மனிதன் சினிமாவில் வெற்றி பெற வேண்டி இருக்கிறது.

    English summary
    Director Ameer noted that the success and fame of cinema is not permanent and should help others.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X