»   »  சுதீப்பின் முடிஞ்சா இவனைப் புடி... முடிந்தது படப்படிப்பு!

சுதீப்பின் முடிஞ்சா இவனைப் புடி... முடிந்தது படப்படிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிச்சா சுதீப் முதல் முறையாக நேரடியாக தமிழில் நடிக்கும் முடிஞ்சா இவனைப் புடி படப்பிடிப்பு ஊட்டியில் நிறைவடைந்தது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். ராம்பாபு புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.பி.பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.


Sudeep's Mudincha Ivana Pudi shoot completed

டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தில் மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் கதையை டி செல்வக்குமார் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தின்


சினிமாட்டோகிராபராக ராஜரத்தினமும்,எடிட்டராக பிரவீன் அண்டனியும்,பணியாற்றியுள்ளனர்.


Sudeep's Mudincha Ivana Pudi shoot completed

இப்படத்தில் வில்லன்களாக முகேஷ் திவாரி,சரத் லோஹித்சுவா நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர், டெல்லிகணேஷ், இமான் அண்ணாச்சி,சிக்கன்னா,கெளதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.


Sudeep's Mudincha Ivana Pudi shoot completed

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை மற்றும் ஊட்டியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. கன்னடத்திலும் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

English summary
Kannada star Sudeep's first direct Tamil movie Mudincha Ivana Pudi shooting was completes recently at Ooty.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil