»   »  வசந்த் படத்தில் மீண்டும் பத்மபிரியா…: சுதா ரகுநாதன் இசை

வசந்த் படத்தில் மீண்டும் பத்மபிரியா…: சுதா ரகுநாதன் இசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் வசந்த் படத்தில் நடிகை பத்மபிரியா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கேளடி கண்மணி', ‘ரிதம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்த். இவர் கடைசியாக ‘மூன்று பேர் மூன்று காதல்' படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்குப் பிறகு, நடை உடை பாவனை படத்தை அறிவித்த வஸந்த் தற்போது, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற படத்தை தொடங்கியிருக்கிறார்.இப்படத்தில் பத்மபிரியா மற்றும் கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சுதாரகுநாதன்

சுதாரகுநாதன்

‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படத்தின் மூலம் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

பெண்களின் பிரச்சினை

பெண்களின் பிரச்சினை

அன்றாட வாழ்வில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய படமாக தயாராகிறது.

பத்மபிரியா

பத்மபிரியா

பத்மபிரியாவுக்கு, வசந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கெனவே, வசந்த் இயக்கத்தில் ‘சத்தம் போடாதே' படத்தில் கதாநாயகியாக நடித்தார் பத்மபிரியா.

நடிக்க மறுத்த நடிகைகள்

நடிக்க மறுத்த நடிகைகள்

மேலும், நடிகைகள் பார்வதி மேனன், ரம்யா நம்பீசன் ஆகியோரை நடிக்க வைக்க அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், இவ்விருவரும் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர்.

குருவுக்கு சமர்பணம்

குருவுக்கு சமர்பணம்

தன்னுடைய குரு கே.பாலச்சந்தரின் பெண் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட வசந்த் இந்த படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.

விரைவில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் வெளிவரும் என தெரிகிறது.

English summary
Director Vasanth has already started shooting for his next film titled, Sivaranjaniyum Innum Sila Pengalum. We hear that the film has Padmapriya and actor Karunakaran in the lead. Actress Parvathy Menon and Remya Nambeesan have also been approached, but they are yet to sign up. Carnatic singer Sudha Ragunathan will be composing music for this film.
Please Wait while comments are loading...