Just In
- 18 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 44 min ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 53 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
Don't Miss!
- Sports
போட்டியில விளையாட வலி நிவாரண ஊசி போட்டுக்கிட்டேன்... 15 ஓவர்களை விளையாட திட்டம் போட்டேன்!
- News
தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேசறவா பேசட்டும்: மகளுக்கு பேஷா திருமணம் செய்த சுதா ரகுநாதன்
சென்னை: பிரபல பாடகி சுதா ரகுநாதன் தனது மகள் மாளவிகாவுக்கும் அவரின் காதலரான ஆப்பிரிக்க-அமெரிக்கரான மைக்கேல் மர்ஃபிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கரான முனைவர் மைக்கேல் மர்ஃபி மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்களும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.
இது குறித்து அறிந்த நெட்டிசன்களோ சுதா ரகுநாதனின் மகள் கிறிஸ்தவராக மாறிவிட்டார் அதனால் அவரின் அம்மாவை இனி சபாக்களில் பாட அனுமதிக்கக் கூடாது என்று கூறி கடுமையாக விமர்சித்தனர்.
வாரே வா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டு.. வனிதாவை வாங்கிய தர்ஷன்!

மாளவிகா
மாளவிகா, மைக்கேல் மர்ஃபியின் திருமணம் சென்னையில் வைணவ முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இருவீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மாப்பிள்ளை மர்ஃபி வைணவ முறைப்படி உடை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுதா ரகுநாதன்
மாப்பிள்ளை மர்ஃபி மட்டும் அல்ல அவரின் குடும்பத்தாரும் தமிழ் கலாச்சாரப்படி உடை அணிந்து திருமணத்திற்கு வந்தவர்களை வியக்க வைத்தனர். திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கிறிஸ்தவரான மர்ஃபியை திருமணம் செய்ய மாளவிகா மதம் மாறவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தார்
மகள் மாளவிகா வெளிநாட்டவரான அதுவும் வேறு மதத்தை சேர்ந்தவரான மர்ஃபியை திருமணம் செய்ததில் சுதா ரகுநாதனுக்கு பிரச்சனை இல்லை. அதே போன்று மர்ஃபி வீட்டாருக்கும் பிரச்சனை இல்லை. இந்நிலையில் நெட்டிசன்கள் தான் மதம், ஆச்சாரம், கலாச்சாரம் என்று கூறி சமூக வலைதளங்களில் சுதா ரகுநாதனை கேவலமாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளையராஜா
மாளவிகா, மைக்கேல் மர்ஃபி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, தளபதி விஜய்யின் அம்மா ஷோபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெட்டிசன்கள் நான்கு நாட்களுக்கு தன்னை திட்டுவார்கள் அதன் பிறகு வேறு பிரச்சனை வந்தால் அதை பற்றி பேசப் போய்விடுவார்கள் என்பது சுதாவுக்கு தெரியும். யார் பேசினால் என்ன மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்று அவர் துணிந்து இந்த திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி வைத்துள்ளார்.