»   »  அமெரிக்க விபத்தில் சுஹாசினி காயம்-சென்னையில் புரளி

அமெரிக்க விபத்தில் சுஹாசினி காயம்-சென்னையில் புரளி

Subscribe to Oneindia Tamil

நடிகை சுஹாசினி அமெரிக்காவில் நடந்த பயங்கர விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அதை சுஹாசினி தரப்பு மறுத்துள்ளது.

நடிகை சுஹாசினி அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது உறவினர்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சென்னையில் ஒரு பரபரப்பு தகவல் பரவியது.

அமெரிக்காவில் நடந்த விபத்தில் சுஹாசினி சிக்கி படுகாயமடைந்துள்ளதாகவும், அவரைப் பார்க்க கணவர் மணிரத்தினம் விரைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது.

இதனால் மணிரத்தினம் வீட்டுக்குப் பலரும் போன் செய்து விசாரித்தனர்.

ஆனால் மணிரத்தினமும் அமெரிக்கா சென்றிருப்பது உண்மை. ஆனால் அமெரிக்காவில் சுஹாசினிக்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை, அது வதந்தி என்று மணிரத்தினம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil