»   »  எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!

எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Suhasini
நடிகைகளை மட்டும் அழகழகானவர்களாக அறிமுகப்படுத்துகிறீர்களே அதேபோல எங்களைப் போன்ற பெண்களுக்காக அழகான ஹீரோககளையும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் நாயகி சுஹாசினி.

சென்னையில் பனித்துளி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சுஹாசினி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சுஹாசினி பேசுகையில், தற்போது கருப்பு ஹீரோக்களையே அதிகம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி வெள்ளைத் தோல் கொண்ட நாயகர்கள்தான் பெண்களுக்குத் தேவை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக அவர் பேசுகையில், நான் ஒரு நடிகையாகவோ, சினிமா சார்ந்தவராகவோ இல்லாமல் சாதாரண பெண் ரசிகை என்ற அளவில் ஒரு கோரிக்கையை இங்கே வைக்கிறேன்.

ஹீரோக்களில் எம்.ஜி.ஆர், கமல், அரவிந்த் சாமி, அஜித் போன்ற ஹேண்ட்சம் ஹீரோக்களை தமிழ் ரசிகைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். நடிகைகளை மட்டும் அழகழகாக அறிமுகப்படுத்துகிறீர்களே, ரசிகைகளுக்கும் அழகான ஹீரோக்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறேன் என்றார்.

இதற்கு கருப்பு நிறம் கொண்ட நாயகனும், இயக்குநருமான சேரன் தனது பாணியில் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில்,

சுஹாசினி பேசிய ஹேண்ட்சம் ஹீரோக்கள் எல்லோருமே வெள்ளை நிறமுடையவர்கள் என்பதால் அப்படி சொல்லி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களிலும் ஹேண்ட்சம் ஹீரோக்கள் இருக்கிறார்கள் மேடம். அவர்களையும் ரசியுங்கள் என்றார்.

சபாஷ் சரியான போட்டிதான்...

English summary
Actress Suhasini has said that women want colorful heroes like MGR, Kamal and Ajith. She was speaking in Panithuli audio release function yesterday. But director Cheran replied that there are many handsome heroes in black!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil