அண்ணாத்த திருவிழா ஆரம்பம்...நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ம் தேதியான நாளை வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் பரவியது. இது உண்மை தான் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இதனால் நாளை ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு என்பது உறுதியாகி உள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு ரஜினி, கிராமத்து கெட்அப்பில் திரும்பி நிற்பது போன்ற மற்றொரு போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படமே பாதி கதையை சொல்வது போது அமைக்கப்பட்டுள்ளது.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

ஃபஸ்ட்லுக் போஸ்டர் மட்டுமல்ல, அண்ணாத்த மோஷன் போஸ்டரும் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு அண்ணாத்த ஃபஸ்ட்லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு அண்ணாத்த மோஷன் போஸ்டரும் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

புதிய போஸ்டர் வெளியீடு

புதிய போஸ்டர் வெளியீடு

அண்ணாத்த கிராம படம், கிராமத்து தலைவராக ரஜினி நடிக்கிறார் என ஏற்கனவே கூறி விட்டனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், புதர் போன்ற புற்கள் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகர் சிலைகள், அதன் இரு பக்கமும் ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள், அதற்கு அருகில் திரும்பி நின்று கொண்டிருக்கும் ரஜினி.

இது தான் கதையா

இது தான் கதையா

ரஜினி நிற்கும் பகுதி கிராமத்து சூழலை காட்டுவதாக இருந்தாலும், அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பகுதி மின் விளக்குகளால் ஜொலிக்கும் பிரம்மாண்ட கட்டிடங்கள் இருப்பதாக உள்ளது. இதனால் பழங்கால கோயில் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்படும் மோதல், அதை சரி செய்து வைக்கும் கிராமத்து தலைவராக ரஜினி என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது.

Recommended Video

இன்னொரு படையப்பா எதிர்பாக்கலாம் | Annaatthe | PRO Riyaz Ahmed Excluisve interview | Filmibeat Tamil
சஸ்பென்ஸ் தந்த போஸ்டர்

சஸ்பென்ஸ் தந்த போஸ்டர்

ஆனால் ரஜினிக்கு முன்புறம் இருக்கும் ஃபாரின் லொகேஷன் என்ன? அது தான் படத்தின் சஸ்பென்சான மீதிக்கதையா என்பது தெரியவில்லை. இந்த வித்தியாசமான போஸ்டர் ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. லைக்குகளும் குவிந்து வருகிறது.

டிரெண்டிங் ஆகும் ஹாஷ்டாக்

டிரெண்டிங் ஆகும் ஹாஷ்டாக்

அண்ணாத்த ஃபஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியிடப்பட உள்ளதை அடுத்து ட்விட்டரில் ரஜினிகாந்த், நயன்தாரா, அண்ணாத்த ஃபஸ்ட்லுக் போன்ற ஹாஷ்டாகுகள் டிரெண்டிங் ஆகி உள்ளன. அதில் ரஜினி ரசிகர்கள் பலர், தலைவா என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர் 2021 ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று என அண்ணாத்த படத்தை டாப்பில் வைத்து கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X