»   »  விஜய், ஏ ஆர் முருகதாஸ் படம்.. பின்வாங்கியது லைக்கா... உள்ளே வந்தது சன் பிக்சர்ஸ்!

விஜய், ஏ ஆர் முருகதாஸ் படம்.. பின்வாங்கியது லைக்கா... உள்ளே வந்தது சன் பிக்சர்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் 62 ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் மீண்டும் இணையும் படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கவிருந்தது.

ஆனால் படத்தின் பட்ஜெட் நூறு கோடியைத் தாண்டியதால் லைகா பின்வாங்கிக் கொண்டது. இதற்கு முந்தைய விஜய் - முருகதாஸ் படங்கள் நூறு கோடி வசூலைத் தொட்டிருக்கின்றன. ஆனால் பட்ஜெட்டே நூறுகோடி என்றால், வசூல் அதை விட இருமடங்காவது இருக்க வேண்டுமல்லவா... எனவேதான் லைகா விலகிக் கொண்டது.

Sun Pictures to produce Vijay - Murugadass film

இப்போது சன் பிக்சர்ஸ் உள்ளே வந்திருக்கிறது. விஜய்யின் வேட்டைக்காரன், சுறா படங்களை வாங்கி வெளியிட்டது சன் பிக்சர்ஸ்தான் என்பது நினைவிருக்கலாம்.

இப்போது நேரடியாகவே விஜய் படத்தைத் தயாரிக்க வந்துள்ளது. தீபாவளி முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.

விஜய் படங்களில் இதுவரை இல்லாத பிரமாண்டம் இந்தப் படத்தில் இருக்கும் என்கிறார்கள்.

நூறு கோடி பட்ஜெட்டாச்சே... இருக்காதா பின்னே!

English summary
Sun Pictures come forward to produce Vijay - AR Murugadass's Rs 100 cr budget movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil