»   »  சின்னத்திரையில் 'புலி'..வெள்ளித்திரையில் 'தெறி'..தளபதி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்

சின்னத்திரையில் 'புலி'..வெள்ளித்திரையில் 'தெறி'..தளபதி ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் விஜய்யின் 'தெறி' திரைப்படம் வெளியாகிறது.

அதே நேரம் சன் டிவியில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புலி' திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது டபுள் சந்தோஷத்தில் திளைத்து வருகின்றனர்.

விஜய், சமந்தா நடிப்பில் நாளை வெளியாகும் 'தெறி'யை தெறிக்க விட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

Sun TV Telecast Vijay's Puli

குறிப்பாக படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு கட்-அவுட்டுகள், தோரணங்கள் போன்றவற்றை வைத்து தங்கள் உற்சாகத்தை கட்டி வருகின்றனர்.

டிக்கெட் விலை பிரச்சினையும் தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால், மேலும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இந்த சந்தோஷமும் இணைந்து கொள்ள சமூக வலைதளங்களில் #theri, #theri fdfs போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டடிக்கச் செய்துள்ளனர்.

மேலும் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தளபதியின் படம் என்பதால், ஒரே நாளில் 2 லட்டுகளை சுவைக்க விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

தற்போதைக்கு தளபதி ரசிகர்களின் மனநிலை இதுதான் 'ஐ ஆம் வெய்ட்டிங்'..

English summary
Tomorrow Vijay's Theri Release Worldwide same Time Sun TV Telecast Vijay's Puli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil