Don't Miss!
- News
இந்திக்கு எதிரான போராட்டம் தொடரும்.. பிற மொழிகளை அழிக்க பாஜக முயற்சி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அதிகமா சாப்பிடுறாங்களா? அப்ப இந்த அறிகுறிகள கண்டிப்பா நீங்க கவனிக்கணுமாம்!
- Finance
இது அதிர்ச்சியளிக்கிறது..FPO-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி.. அதானி குழுமம் பரபர கருத்து!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
ரஞ்சிதமே கிஸ் கொடுத்த சன்னி லியோன்... மேடையிலேயே ஆட்டம் போட்ட ஜிபி முத்து... வாழ்றான்யா மனுஷன்!
சென்னை: சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோருடன் டிக் டாக், பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்துவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,
படத்தின்
ரிலீஸை
முன்னிட்டு
ஓ
மை
கோஸ்ட்
ப்ரோமோஷன்
நிகழ்ச்சி
நடைபெற்றது.
இதில்
சன்னி
லியோன்,
ஜிபி
முத்து,
சதீஷ்
உள்ளிட்ட
ஓ
மை
கோஸ்ட்
படக்குழுவினர்
கலந்துகொண்டனர்.
நயன்தாரா
vs
சன்னி
லியோன்..
ஆண்டு
இறுதியில்
பேயாட்டம்
ஆட
காத்திருக்கும்
டாப்
ஹீரோயின்கள்!

சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட்
ஆர். யுவன் இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன், சதிஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோருடன் ஜிபி முத்துவும் நடித்துள்ளார். ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. சன்னி லியோன் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளதால், இந்த படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக ஓ மை கோஸ்ட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றிருந்தது.

ரஞ்சிதமே கிஸ் - ஜிபி முத்து ஆட்டம்
இந்நிலையில், ஓ மை கோஸ்ட் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சன்னி லியோன், ஜிபி முத்து, சதீஷ் உள்ளிட்ட ஓ மை கோஸ்ட் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையேறிய சன்னி லியோன், வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலில் விஜய் கொடுத்த கிஸ் போன்று அவரும் ரசிகர்களை நோக்கி கொடுத்தார். சன்னி லியோனிடம் இருந்து ரஞ்சிதமே கிஸ்ஸை எதிர்பார்க்காத ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். அப்போது அவரது அருகில் நின்று கொண்டிருந்த ஜிபி முத்துவும் சன்னி லியோனுடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வாழ்றான்யா மனுசன்
முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜிபி முத்து அதகளமாக பேசி, ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்திருந்தார். "இந்தப் படத்துல சன்னி லியோன் கூட நடிச்சிருக்கேன் நண்பர்களே. சன்னி லியோன் கூட நடிக்குறேன்னு தெரிஞ்சதும் நிறைய கமெண்ட்ஸ்லாம் வரும். அப்போ சன்னி லியோன் அக்கா யார்ன்னே எனக்கு தெரியாது, அதனால அவங்க நடிச்ச படங்கள் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்" என சொன்னதும், மொத்த அரங்கமும் சிரிப்பால் அதிர்ந்தது. மேலும், "இதில் சன்னி லியோன் கூட சேர்ந்து டான்ஸ் ஆடிருக்கேன்" என உற்சாகமாக கூறினார்.

மறக்க முடியுமா அந்த பால்கோவா?
அப்போது மேடையில் இருந்த சன்னி லியோனுக்கு ரசிகர்கள் சார்பாக பால்கோவாவும் ஊட்டிவிட்டார் ஜிபி முத்து. பதிலுக்கு சன்னி லியோனும் ஜிபி முத்துவுக்கு பால்கோவா ஊட்டிவிட ரசிகர்களின் கை தட்டல் விண்ணைப் பிளந்தது. இந்தப் படத்தில் டாக்டராக நடித்துள்ள ஜிபி முத்து, அந்த கேரக்டர் பேரை கேட்டாலே சிரிப்பு தான் வரும் என கூறியிருந்தார். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிபி முத்து பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 30ம் தேதி வெளியாகும் ஓ மை கோஸ்ட் ஹிட் அடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.