»   »  மணி மணி: விஜய்யின் பைரவா படத்தில் குத்தாட்டம் போட மறுத்த சன்னி லியோன்?

மணி மணி: விஜய்யின் பைரவா படத்தில் குத்தாட்டம் போட மறுத்த சன்னி லியோன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட மறுத்துள்ளார் சன்னி லியோன்.

வெளிநாடுகளில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்தி படங்கள், விளம்பரப் படங்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் குத்தாட்டம் போட்டு வருகிறார்.

தமிழில் அவர் ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

பைரவா

பைரவா

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் பைரவா படத்தில் குத்துப்பாடல் ஒன்று உள்ளது. அந்த பாடலுக்கு குத்தாட்டம் போடுமாறு சன்னி லியோனிடம் கேட்க அவரோ மறுத்துவிட்டாராம்.

சன்னி

சன்னி

பைரவா படத்தில் சன்னி குத்தாட்டம் போட மறுத்ததற்கு காரணம் காசு பணம் துட்டு மணி மணி. தான் ஆட சொலையாக ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும் என சன்னி கேட்டுள்ளார். சரி பரவாயில்லை கொடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்தபோது புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

10 பேர்

10 பேர்

என்னுடன் 10 பேர் மும்பையில் இருந்து சென்னை வருவார்கள். அவர்களின் பயணச் செலவு, ஹோட்டல் உள்ளிட்ட இதர செலவுகளையும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் சன்னி.

பணம்

பணம்

தான் கேட்ட பணம் மற்றும் செலவுகளை சமாளிக்க முடியாது என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்ததை அடுத்து ஆட மறுத்துவிட்டாராம் சன்னி. சன்னிக்கு பதிலாக வேறு ஆளை குத்தாட்டம் போட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
Buzz is that Sunny Leone refused to do item number in Vijay's Bairavaa citing monetary reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil