»   »  சன்னியின் பாடல்கள் ஆண்களை பலாத்காரத்திற்கு தூண்டுகின்றன: நடிகை ராக்கி சாவந்த்

சன்னியின் பாடல்கள் ஆண்களை பலாத்காரத்திற்கு தூண்டுகின்றன: நடிகை ராக்கி சாவந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோனின் படங்கள் மக்களை பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டுவதால் அவர் இந்தியாவில் நடிக்க தடை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு சன்னி லியோனை கண்டாலே பிடிக்காது. வெளிநாட்டில் ஆபாசப் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவரை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சன்னி லியோன் பற்றி ராக்கி கூறுகையில்,

பலாத்காரம்

பலாத்காரம்

சன்னி லியோன் நடிக்கும் படங்கள் மக்களை பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டுகின்றன. அதனால் அவர் இந்தியாவில் நடிக்க தடை செய்ய வேண்டும்.

நடிப்பு

நடிப்பு

ஒரு பக்கம் சன்னி பொதுநலன் கருதி விளம்பரத்தில் நடிக்கிறேன் என்கிறார். மறுபக்கம் என்னவென்றால் படுகவர்ச்சியாக பாடல்களில் ஆடுகிறார். அவரது பாடல்களை பார்ப்பவர்கள் சூடாகி பெண்களிடம் தவறாக நடக்கிறார்கள்.

சன்னி

சன்னி

சன்னி லியோன் ஆடை அணிந்து நடிக்க தான் தயாரிப்பாளர்கள் அவருக்கு பணம் தருகிறார்கள். அவர் தனது அங்கங்களை எல்லாம் மறைக்கும்படி ஆடை அணியும் வரை அவரை நடிக்கவிடக் கூடாது என்றார் ராக்கி.

அஞ்சான்

அஞ்சான்

சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தை பார்க்க மக்களை அணுமதித்தால் நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் குமார் அஞ்சான் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Rakhi Sawant told that Sunny Leone should be banned in India as her work incites rape.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil