»   »  உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?

உலகில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரயீஸ் படத்தில் வரும் லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோர் பார்த்து ரசித்த வீடியோ ஆகும்.

ஷாருக்கான் நடித்துள்ள ரயீஸ் படம் ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான் ஹீரோயினாக நடித்துள்ளார்.

படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

பாடல் வீடியோ

பாடல் வீடியோ

சன்னி ஆட்டம் போட்டுள்ள லைலா மெய்ன் லைலா பாடல் வீடியோ தான் உலகில் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்ட வீடியோ ஆகும். சன்னியின் பாடல் வீடியோ இப்படி ஒரு சாதனை படைத்துள்ளது.

சன்னி

தனது பாடல் வீடியோ படைத்த சாதனையை பார்த்த சன்னி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜீனத் அமன்

ஜீனத் அமன்

குர்பானி படத்திற்காக ஜீனத் அமன் ஆடிய லைலா மெய்ன் லைலா பாடலுக்கு தான் தற்போது சன்னி நடனம் ஆடியுள்ளார். இது ஜீனத் பாடலை விட வித்தியாசமாக வந்துள்ளது என்கிறார் சன்னி.

காபில்

ரயீஸ் படம் வெளியாகும் அதே நாளில் ரித்திக் ரோஷன், யாமி கவுதம் பார்வையில்லாதவர்களாக நடித்துள்ள காபில் படமும் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leone's Laila Main Laila song from the upcoming movie Raees has topped the 'world's most watched video' list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil