»   »  ஓவர் ஆபாசம்: சன்னியின் மஸ்திஜாதே படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுக்கும் சென்சார் போர்டு

ஓவர் ஆபாசம்: சன்னியின் மஸ்திஜாதே படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுக்கும் சென்சார் போர்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோன் நடித்துள்ள செக்ஸ் காமெடி படமான மஸ்திஜாதேவுக்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து படக்குழுவினர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியுள்ளனர்.

மிலாப் ஜாவேரி இயக்கியுள்ள செக்ஸ் காமெடி படம் மஸ்திஜாதே. சன்னி லியோன், துஷார் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மே மாதம் 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

அந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்துவிட்டது.

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

மஸ்திஜாதே படத்தில் ஓவர் கவர்ச்சி, இந்திய கலாச்சாரத்திற்கு புறம்பான காட்சிகள் இருப்பதாகக் கூறி சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து படக்குழுவினர் சான்றிதழ் கேட்டு மீண்டும் சென்சார் போர்டை அணுகினர்.

மறுப்பு

மறுப்பு

படத்தில் ஆபாசம் அதிகம் அதனால் சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறி படக்குழுவினரின் கோரிக்கையை ஏற்க சென்சார் போர்டு இரண்டாவது முறையாகவும் மறுத்துள்ளது.

அது ஏன்?

அது ஏன்?

படத்தில் ஆபாசம் அதிகம் இருந்தால் சில காட்சிகளை கத்தரித்துவிட்டு சான்றிதழ் வழங்க வேண்டியது தானே. அது என்ன சான்றிதழே அளிக்க முடியாது என்பது என படக்குழுவினர் கருதுகிறார்கள். இந்நிலையில் சென்சார் போர்டு சான்றிதழ் விவகாரம் குறித்து படக்குழுவினர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியுள்ளனர்.

பெண் உறுப்பினர்

பெண் உறுப்பினர்

சென்சார் போர்டில் உள்ள பெண் உறுப்பினர் ஒருவர் படத்தின் சில காட்சிகளை நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் வழங்குமாறு தெரிவித்ததாகவும், அவரின் கருத்தை பிறர் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சன்னி

சன்னி

சன்னி லியோன் டிரெய்லரில் 2 கைகளில் இரண்டு வாழைப்பழங்களை வைத்திருந்ததே பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மேலும் படத்தில் சன்னி முழுக்க முழுக்க கவர்ச்சி காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sunny Leone's sex comedy Mastizaade is yet to hit the screens as censor board has rejected to give certification because of too much bold scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil