»   »  தமிழுக்கு வரும் சன்னி லியோனின் கவர்ச்சிப் படம்!

தமிழுக்கு வரும் சன்னி லியோனின் கவர்ச்சிப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கில்மா பட நடிகையான சன்னி லியோன் பாலிவுட்டுக்கு வந்த பிறகு முழு நேர நடிகையாகிவிட்டார்.

அப்படி அவர் நடித்த 'ராகினி எம்எம்எஸ் 2' இந்திப் படத்தை தமிழ், தெலுங்கில் 'ராத்ரி' என்று மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

Sunny Leone's Ragini MMS 2 to be dubbed in Tamil

இந்தியில் இப்படத்தைத் தயாரித்த ஜிதேந்திராவின் ஸ்ரீபாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தமிழ், தெலுங்கிலும் வெளியிடுகிறது.

இந்தப் படத்துக்காக இயக்குநர் ஆதிராஜன் எழுதிய பாடல் ஒன்றை ரம்யா நம்பீசன் பாடினார்.

Sunny Leone's Ragini MMS 2 to be dubbed in Tamil

பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய 'பேபி டால்' என்ற சூப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 8 கோடி பேர் யூட்யூப்பில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.

Sunny Leone's Ragini MMS 2 to be dubbed in Tamil

ராத்ரி படத்தின் வசனங்களையும், பாடல்களையும் சிவந்தி, ரணதந்த்ரா, அதர்வணம் போன்ற படங்களின் இயக்குநரான ஆதிராஜன் எழுதியிருக்கிறார்.

Sunny Leone's Ragini MMS 2 to be dubbed in Tamil

இவர் எழுதிய 'ஜொலி ஜொலிக்கும் டிஜிட்டல் பொண்ணு தெறி தெறிக்கப் பார்த்தா ஜின்னு,' என்று தொடங்கும் ஸ்டைலிஷான ( பேபி டால் ) பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறாராம்.

English summary
Sunny Leone's Ragini MMS 2 to be dubbed in Tamil as Rathri and release by Sri Balaji Motion Pictures.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil