சிங்கம் 4 ஸ்கிரிப்ட் ரெடி… சமாதானம் ஆன சூர்யா... ஓங்கி அடிச்சா எத்தன டன் வெயிட்டுன்னு தெரியுமா?
சென்னை: சூர்யா 42, வணங்கான் படங்களில் நடித்து வரும் சூர்யா, அடுத்து வாடிவாசல், தசெ ஞானவேல் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
சூர்யா அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கவுள்ள நிலையில், மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா - இயக்குநர் ஹரி இடையே மோதல் என செய்திகள் வெளியானது, ஆனால் தற்போது இருவரும் புதிய படத்திற்காக ரெடியாகி வருகிறார்களாம்.

ஹரி யுனிவர்சல்
பிரசாந்த் நடித்த 'தமிழ்' என்ற படம் மூலம் இயக்குநரான ஹரி, சாமி, கோவில், ஐயா, வேல் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். சூர்யாவுடன் ஹரி இணைந்த ஆறு, வேல், சிங்கம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. சூர்யா - ஹரி கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முக்கியமாக 2010, 2013, 2017 ஆண்டுகளில் மூன்று பாகங்களாக வெளியான சிங்கம் சூப்பர் டூப் ஹிட் அடித்தது.

கைவிடப்பட்ட அருவா
ஆறு, வேல், சிங்கம் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் சூர்யா - ஹரி கூட்டணி மாஸ் காட்டியுள்ளது. இதனிடையே சூர்யா நடிப்பில் அருவா என்ற படத்தை இயக்க ஹரி திட்டமிட்டிருந்தார். ஆனால், சூர்யாவுக்கும் ஹரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் அருவா படம் தொடங்குவதற்கு முன்பே டிராப் ஆனது. மேலும், சூர்யா - ஹரி கூட்டணியில் பிளவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், அருவா படம் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்பட்டது.

சூர்யா – ஹரி சமாதானம்
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஹரி, 'அருவா' இன்னும் அங்கேயே தான் இருக்கிறது. சூர்யா ஓக்கே சொன்னால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கும் என ட்வீஸ்ட் வைத்திருந்தார். இதனால், அருவா படம் விரைவில் படப்பிடிப்புக்கு போகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யா - ஹரி கூட்டணியில், சிங்கம் படத்தின் 4ம் பாகம் உருவாகப் போகிறதாம்.

ஷூட்டிங் எப்போ?
சூர்யா கேரியரில் சிங்கம் படம் அவருக்கு மிகப் பெரிய ஹிட் என்றே சொல்லலாம். போலீஸ் கேரக்டரில் ரஃப் அண்ட் டஃப்பாக ஆக்சனில் வெடித்துச் சிதறிய சூர்யா, வசனங்கள் பேசும் போது தியேட்டரில் ஸ்பீக்கர்களே தேவைப்படாத அளவில் ஆக்ரோஷமாக முழங்குவார். "ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா... பாக்குறீயா... பாக்குறீயா.." என்ற வசனமும், அதற்கு சூர்யா கொடுத்த எனர்ஜியும் ரசிகர்களையே மிரள வைத்தது. அதேபோல், சிங்கம் 4ம் பாகத்திலும் சூர்யாவின் ஆக்சன் ட்ரீட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், சிங்கம் 4ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











