twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல.. சூர்யா ட்வீட்

    |

    சென்னை: ஒளிப்பதிவு திருத்த வரைவு சட்டத்திற்கு எதிராக நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

    ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021ஐ அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் கமல்ஹாசன், வெற்றிமாறனை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் அந்த சட்டத்திருத்தத்திற்கு எதிரான தனது நிலைபாட்டை கூறியுள்ளார்.

    பிரபல OTT நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்கவுள்ளாரா SJ சூர்யா!? பிரபல OTT நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்கவுள்ளாரா SJ சூர்யா!?

    இன்றே கடைசி

    இன்றே கடைசி

    சினிமாடோகிராஃப் சட்டம் 1952ஐ திருத்தம் செய்து சினிமாடோகிராஃப் சட்டம் 2021ஐ அமல்படுத்த கடந்த மாதம் 18ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், அந்த சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்களை பொதுமக்கள் மற்றும் சினிமா துறையினர் இன்றைக்குள் தெரிவிக்கவும் மத்திய அரசு கெடு விதித்திருந்தது.

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன் தனது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தி இருந்தார். இயக்குநர் வெற்றிமாறன் இந்த சட்டம் அமலாக்கப்படக் கூடாது என தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

    சூர்யா கண்டனம்

    சூர்யா கண்டனம்

    நடிகர் கமல்ஹாசனை தவிர தமிழ்நாட்டில் இது தொடர்பாக எந்தவொரு முன்னணி நடிகருக்கும் அக்கறை இல்லையா என்கிற கேள்வி சமூக வலைதளத்தில் எழுந்தது. பிரபல நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், விஜய்சேதுபதி, சூர்யா எல்லாம் குரல் கொடுக்க மாட்டார்களா என்கிற கருத்து நிலவிய நிலையில், தற்போது நடிகர் சூர்யா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல

    குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல

    நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல" என ட்வீட் போட்டு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மேலும், இன்றே கடைசி நாள், சினிமா பிரபலங்கள் பலரும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள் எனக் கூறியுள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

    கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்

    கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக இந்த சட்டத் திருத்த மசோதா மாறிவிடும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

    English summary
    Suriya tweet against on Cinematograph act 2021
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X