தளபதி 67ல் ரோலக்ஸ்ஸா..? விஜய்க்காக லோகேஷ் வைத்திருக்கும் சீக்ரெட் சர்ப்ரைஸ் இதுதானா…?
சென்னை: விஜய் நடிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கிறார் விஜய்.
விரைவில் தளபதி 67 படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்களுக்கான வெயிட்டான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் – லோகேஷ் காம்போ
விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து லோகேஷுடன் கைகோர்க்கிறார் விஜய். தளபதி 67 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர், இனி தனது படங்கள் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பின்னணியில் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார். அதாவது தனது முந்தைய படங்களின் கதை அல்லது கேரக்டர்கள் அடுத்தடுத்த படங்களில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். அதனால் தளபதி 67 திரைப்படமும் லோகேஷின் யுனிவர்ஸில் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தளபதிக்கு வில்லனாக ரோலக்ஸ்
மும்பை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக தளபதி 67 உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் கேரக்டரில் என்ட்ரி கொடுத்து மிரட்டியிருப்பார் சூர்யா. இந்த கேரக்டர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்தந்து. இந்நிலையில், தளபதி 67 படத்திலும் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது படம் முழுக்க வரும் வில்லன் பாத்திரமா அல்லது கேமியோ ரோலா என இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. சூர்யா நடிகராக அறிமுகமான 'நேருக்கு நேர்' படத்தில், விஜய்யும் சூர்யாவும் எதிரும்புதிருமாக மோதிக்கொள்வார்கள். அதன் பிறகு 'பிரண்ட்ஸ்' படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருந்தனர்.

சீக்கிரம் அப்டேட் சொல்லுங்க
இந்நிலையில், தளபதி 67ல் விஜய்யும் சூர்யாவும் மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அப்படி இந்தக் கூட்டணி இணைந்துவிட்டால் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு பிரம்மாண்டமான மல்டி ஸ்டார் படமாக தளபதி 67 இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனிடையே, ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தின் ரீமேக் உரிமையை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். எனவே அந்த திரைப்படத்தின் ரீமேக்காக தளபதி 67 இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











