தலைவி சுருதியை ஏன் வெளியே அனுப்புனீங்க.. 3வது புரமோவை பார்த்து பொங்கி எழும் நெட்டிசன்கள்!
சென்னை: முன்பெல்லாம் கமல் சார் வரும் வீக்கெண்ட் ஷோ தான் சூப்பரா இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் ரொம்பவே டல் அடிப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் எவிக்ஷன் தான் அந்த ஷோவின் ஹைலைட்டான ஒன்றே ஆனால், சமீப காலமாக அது ரொம்பவே போர் ஆகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சில சண்டைகள் மட்டுமே ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறது.

சுருதியின் வெளியேற்றம்
இந்த வாரம் சுருதி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தகவல் கசிந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சுருதியின் வெளியேற்றம் நியாயமான ஒன்று இல்லை என்றும் பலர் கூறி வருகின்றனர்.

கடுப்பான ரசிகர்கள்
சிலர் சுருதியிடம் தானே காயின் இருந்தது அவர் எப்படி வெளியேறி இருப்பார் என்றும் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், தற்போது வெளியான மூன்றாவது புரமோவில் கமல் சார் சுருதியின் வெளியேற்றத்தை கன்ஃபார்ம் செய்தது போல பேசி உள்ளதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கடுப்பாகி உள்ளனர்.

ஒரே பில்டப் தான்
"யாரு எவிக்ட்னு எங்களுக்கு அல்ரெடி தெரியும்.. சும்மா மூணு புரமோவிலும் ஒரே பில்டப் தான்" என மூன்றாவது புரமோவிலும் சுருதியின் எவிக்ஷன் பற்றியே கமல் பேசியதால் நெட்டிசன்கள் கடுப்பாகி கலாய்த்து வருகின்றனர்.

திருடுன காயின்
"திருடுன காயின் கடைசி வரை கூட வராது தெரிஞ்சுக்க சுருதி.. தாமரைக்கு நியாயம் கெடச்சுட்டு பிக்பாஸ்" என தாமரை செல்வியின் ரசிகர்கள் சுருதியின் எலிமினேஷனை கொண்டாடி வருகின்றனர். அபிஷேக் ராஜாவை மூடிட்டு போ என சொல்லி ரசிகர்கள் அன்பை அள்ளிய சுருதி தாமரையின் காயினை திருடியதால் அவரது ஒட்டுமொத்த இமேஜும் சரிந்து விட்டதாகவும் தாமரை சப்போர்ட்டர்ஸ் சொல்லி வருகின்றனர்.

சம்பளம் கொடுப்பவர்களை
"அவங்கனு அவர் சொல்றது ஓட்டு போடற பொதுமக்களை அல்ல சம்பளம் கொடுக்கும் சேனலை" என வழக்கம் போல இந்த் எவிக்ஷனுக்கும் விஜய் டிவி தான் காரணம் என சில நெட்டிசன்கள் குறை சொல்லி வருகின்றனர்.

தலைவி சுருதி
"தலைவி சுருதியை ஏன்டா வெளில அனுப்புனீங்க" என சுருதியின் ஆர்மியினர் அவரது எவிக்ஷனை எதிர்த்து கொந்தளித்து வருகின்றனர். ஓவியாவை தலைவியாக கொண்டாடிய பிக் பாஸ் ரசிகர்கள் இந்த சீசனில் சுருதியை தலைவியாக கொண்டாட தொடங்கிய நிலையில், திடீரென அவர் வெளியேற்றப்பட்டு இருப்பது ரசிகர்களை நிஜமாகவே கடுப்பாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











