»   »  துபாயில் திரையிடப்பட்ட ‘சி 3' சிறப்புக் காட்சி - சூர்யா பங்கேற்பு!

துபாயில் திரையிடப்பட்ட ‘சி 3' சிறப்புக் காட்சி - சூர்யா பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சி 3' (சிங்கம் 3) உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின், முதல் சிறப்புக் காட்சி துபாயில் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா பங்கேற்று, ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து குதூகலப்படுத்தினார்.

ஹயாட் ரீஜென்சியில் உள்ள ஸ்டார் கலேரியா சினிமாஸ் அரங்கில் நடைபெற்ற இந்த முதல் காட்சி திரையிடல் நிகழ்ச்சியை எஃப்டிபி அட்வர்டைசிங் மற்றும் யெஸ் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன.


Surya attends Si3 premier at Dubai

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் படம் குறித்துப் பேசியதோடு, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்ன சூர்யா, அவர்களுடன் சேர்ந்து படத்தையும் பார்த்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது.


கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்தின் தொடர்ச்சியாகவும் சிங்கம் என்ற பெயரில் தொடர்ந்து வெளிவரும் வரிசையில் 3 வது திரைப்படமாகவும் சி 3 வெளிவந்திருக்கிறது. அதிரடி காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த திரைப்படமானது, கடந்த 9 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் காட்சியாக திரையிடப்பட்டது. இது ஹரி - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள 5 வது படம்.

Read more about: surya, சூர்யா
English summary
Actor Surya has attended the special premier of Si3 at Dubai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil