»   »  ஜி.வி.பிரகாஷின் பென்சிலுக்கு உதவிய சூர்யா

ஜி.வி.பிரகாஷின் பென்சிலுக்கு உதவிய சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'பென்சில்' படத்தின் தமிழ், தெலுங்கு டிரெய்லரை நடிகர் சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி வந்த பென்சில் திரைப்படம் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்தது.

Surya Released Pencil Trailer

தற்போது டார்லிங், திரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களை வெற்றியால் தற்போது பென்சிலுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.

ஆமாம் நீண்ட மாதங்களாக கிடப்பில் கிடந்த அப்படத்தை தூசு தட்டி வெளியிடும் முயற்சிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் சூர்யா இப்படத்திற்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார். அதன்படி இன்று மாலை பென்சில் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

வளர்ந்து வரும் நடிகர்களின் புரோமோஷன், டிரெய்லர் ஆகியவற்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சூர்யா அவ்வப்போது வெளியிட்டு அவர்களை உற்சாகமூட்டி வருகிறார்.

இதன் மூலம் ஒரு முன்னணி நடிகராக வளரும் நடிகர்களின் படங்களுக்கு, சூர்யா தன்னாலான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தணிக்கையில் பென்சில் யூ/ஏ சான்றிதழைப் பெற்றிருக்கிறது.

English summary
Actor Surya Released Pencil Trailer for his Twitter Page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil