»   »  ஏ ஆர் ரஹ்மானுக்கு சூர்யா சொன்ன சாக்லேட் கதை!

ஏ ஆர் ரஹ்மானுக்கு சூர்யா சொன்ன சாக்லேட் கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

24 படத்துக்கு இசையமைக்க ஏ ஆர் ரஹ்மான் ஒப்புக் கொண்டது மற்றும் அவர் கதை கேட்ட விதம் குறித்துப் பேசிய நடிகர் சூர்யா, ரஹ்மானுக்கென்றே ஒரு கதை சொன்னார்.

அந்தக் கதை:

24 படத்தின் கதையை என்னிடம் விக்ரம் குமார் 4 மணி நேரம் முழு ஸ்க்ரிப்டாக சொல்லி முடித்ததும் எழுந்து நின்று கைத்தட்டினேன். இப்படி பிரமித்துப் பாராட்டியது இதுதான் முதல் முறை.

Surya's mini story to AR Rahman

அடுத்து இந்தப் படத்துக்கு ரஹ்மான்தான் இசை என்று முடிவு செய்து அவருக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினேன். அவரும் ஒரு தேதி கொடுத்து 30 நிமிடம் டைம் கொடுத்தார்.

எனக்கு பெரிய வியப்பு... எனக்கு 4 மணி நேரம் சொன்ன கதையை ரஹ்மானுக்கு எப்படி 30 நிமிடங்களில் விக்ரம் குமார் சொல்லப் போகிறார் என்று.

ஆனால்அரை மணி நேரம் மட்டுமே தந்த ரஹ்மான், கடைசியில் 6 மணி நேரம் கதை கேட்டார். பின்னர் இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

அவருக்காக ஒரு சின்ன கதையைச் சொல்கிறேன்.

ஒரு குழந்தை ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சாக்லெட் பாட்டில்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தது. பின்னாலேயே வந்த அவளது அம்மா, உனக்கு வேண்டிய சாக்லெட்டை எடுத்துக் கொள் என்று அந்த குழந்தையிடம் சொன்னார்.

ஆனால், அந்த குழந்தையோ எந்த சாக்லெட்டும் எடுக்கவில்லை. ஆனால் சாக்லெட்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தது.

கடைக்காரர் தொடர்ந்து வற்புறுத்தி சாக்லெட் எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால், அந்த குழந்தை திரும்பவும் சாக்லேட் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு, ஆனால் சாக்லெட்டையே பார்த்துக் கொண்டிருந்தது.

பொறுமையிழந்த அந்த கடைக்காரர் தனது கையில் ஒரு கொத்து சாக்லெட்டை எடுத்து அந்த குழந்தையின் கையில் திணித்தார். அந்த குழந்தையும் சிரித்தபடி அதை பெற்றுக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தது.

அப்போது, அந்த குழந்தையின் அம்மா, அவளைப் பார்த்து ஏன் முதலில் சாக்லேட் வேண்டாம் என்று அடம்பிடித்தாய் என்று கேட்டதற்கு, அந்த குழந்தை 'என்னுடைய கை மிகவும் சிறிய கை. என் கையால் எடுத்தால் கொஞ்சம்தான் கிடைக்கும். ஆனால், கடைக்காரரின் கை பெரியது. அவரது கையால் எடுத்து கொடுத்தால் நிறைய சாக்லெட்டுக்கள் கிடைக்கும்,' என்றது.

நாம் கடவுளிடம் எது கேட்டாலும் குறைவாகத்தான் கேட்போம். ஆனால், கடவுள் நமக்கு தரும்போது நாம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே தருவார். அதுபோலத்தான் ஏ.ஆர்.ரஹ்மானும். நாம் அவரிடம் எதையும் எதிர்பார்த்து கேட்க முடியாது. ஆனால், அவர் நாம் எதிர்பார்த்ததைவிட நிறையவே தருவார்," என்றார்.

லேசான புன்னகையோடு இந்தக் கதையைக் கேட்டு ரசித்தார் இசைப் புயல் ரஹ்மான்!

English summary
Actor Surya has narrated a short story to AR Rahman in 24 audio launch event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil