»   »  கல்லூரி படிக்கும்வரை நானும் ஒரு டம்மி பீசுதான்! - 24 இசை வெளியீட்டு விழாவில் சூர்யா

கல்லூரி படிக்கும்வரை நானும் ஒரு டம்மி பீசுதான்! - 24 இசை வெளியீட்டு விழாவில் சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சூர்யா நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான 24 படப் பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த இந்த விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகை நித்யா மேனன், பாடகி சக்திஸ்ரீ கோபாலன், பென்னி தயாள், சின்மயி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடினர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், நடிகை நித்யா மேனன், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், பென்னி தயாள், சின்மயி, இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குற்ற உணர்வு

குற்ற உணர்வு

இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், "என்னுடைய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களாகிய நீங்கள் கலந்துகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவ்வளவு நாள் ரசிகர்களை நான் சந்திக்க முடியாததை குற்ற உணர்வாக நினைக்கிறேன். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிசியாக இருந்ததால் உங்களைச் சந்திக்க முடியவில்லை.

என் மீது அக்கறை

என் மீது அக்கறை

என்னுடைய படங்கள் நல்ல படங்களாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க வையுங்கள். தப்பான படங்களாக இருந்தால் அதை ஜெயிக்க விடாதீர்கள். அப்போதுதான் நாம் என்ன தவறு செய்தோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் என்னுடைய வளர்ச்சிக்காக ரொம்பவும் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்.

அப்துல்கலாம்தான் முன்னோடி

அப்துல்கலாம்தான் முன்னோடி

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு நேரம் இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்தி, முன்னேறுவதற்கான வழியை தேடவேண்டும். சாதாரண பேப்பர் போடுபவராக இருந்த அப்துல் கலாம், ஒரு ஏவுகணை செலுத்தக்கூடிய அளவுக்கு பெரிய விஞ்ஞானியாக மாறியது, அவருக்கான நேரத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டதுதான்.

மாணவர்கள் தற்கொலை

மாணவர்கள் தற்கொலை

அதேபோல், உங்களுக்கும் அந்த நேரம் வரும். அதுவரை பொறுமையாக இருங்கள். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு வினாத்தாளை பார்த்து 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தியை கேட்டபோது என் மனது ரொம்பவும் வலிக்கிறது. படிப்பு என்பது வாழ்க்கையை எப்படி வழிநடத்துவதற்காகத்தான்.

சும்மா படைக்கவில்லை

சும்மா படைக்கவில்லை

ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. உங்களையெல்லாம் இந்த உலகத்துல சும்மா யாரும் படைக்கலை. யாரும் அவசரப்படாதீர்கள். அந்த நேரத்தை எப்படி நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான்.

நானும்...

நானும்...

கல்லூரி படிக்கும்வரை நானும் ஒரு டம்மி பீசுதான். அதன்பிறகு இப்படி வளர்ந்திருக்கிறேன் என்றால் என்னுடைய அப்பாதான் காரணம். அவர்தான் எனக்கு நல்ல அறிவுரைகளை கூறினார். எனக்கான நேரமும் ஒருநாள் வந்தது. அதைநான் சரியாக பயன்படுத்தி இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன். அதுபோல், உங்களுக்கான நேரமும் வரும், நீங்களும் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்," என்றார்.

English summary
Actor Surya says that he has used his opportunity and time perfectly and become as a leading actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil