»   »  சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி- விஷ்ணு... பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது!

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி- விஷ்ணு... பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் புதிய படத்தை சுசீந்திரன் இயக்குகிறார் என்பது தெரிந்த செய்தி.

இந்தப் படத்தில் உதயநிதியுடன் இன்னொரு நாயகனாக நடிக்கப் போகிறவர் விஷ்ணு விஷால். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினே தனது ரெட்ஜெயன்ட் மூலம் தயாரிக்கிறார்.

ரெட்ஜெயன்ட் மூலம் இதுவரை 11 படங்களை தயாரித்துள்ளார் உதயநிதி. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாவது 12வது படம்.

Suseendhiran - Udhayanidhi movie starts with pooja

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.

விரைவில் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை அறிவிப்போம் என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
Udhayanidhi Stalin's new movie has been launched with a formal pooja today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil