For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எல்லோர் கண்களும் சாராவின் மேல் தான்.. அப்பவே நொறுங்கிப் போன சுஷாந்த்.. கேதார்நாத் இயக்குநர் பளிச்!

  |

  மும்பை: கேதார்நாத் பட ரிலீஸ் சமயத்தில், சாரா அலி கான் அறிமுகத்தால் ரொம்பவே அப்செட்டாகி இருந்தார் சுஷாந்த் சிங் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அபிஷேக் கபூர்.

  Sushant Singh இறந்த பின் கிடைக்கும் அங்கிகாரம் | Remembering

  34 வயதான இளம் பாலிவுட் நடிகர் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பாலிவுட்டையே புரட்டிப் போட்டு இருக்கிறது.

  காதல் விவகாரம் மற்றும் நெபோடிசன் என இரு பெரும் பிரச்சனைகள் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற சர்ச்சை வெடித்து இருக்கிறது.

  போலீசார் விசாரணை

  போலீசார் விசாரணை

  சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதல் ரியா சக்கரபோர்த்தி மற்றும் கரண் ஜோஹர் தயாரிப்பு நிறுவனம் என இரு தரப்பையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது மும்பை போலீஸ். டிவி நடிகராக அறிமுகமாகி 200 கோடி கிளப் வரை இணைந்த ஒரு நடிகரின் மரணம் பாலிவுட் ரசிகர்களையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

  தலைவிரித்தாடும் பிரச்சனை

  தலைவிரித்தாடும் பிரச்சனை

  சுஷாந்த் சிங் ராஜ்புத்தை மட்டுமல்ல பல இளம் நடிகர்களை பாலிவுட்டில் இந்த வாரிசு அரசியல் எனும் நெபோடிசம் காவு வாங்கி வருவதாக பலரும் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளையும், புறக்கணிப்புகளையும் சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து தைரியமாக முன் வைத்து வருகின்றனர். ரசிகர்களும், இந்த நெபோடிசத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

  சாரா அலி கான் அறிமுகம்

  சாரா அலி கான் அறிமுகம்

  கை போ சே படத்தின் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை பாலிவுட்டுக்கு ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அபிஷேக் கபூர், கேதார்நாத் படத்தில் நடிகர் சைஃப் அலி கான் மகள் சாரா அலி கானை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில், ரொம்பவே அப்செட்டாகி இருந்தார் சுஷாந்த் என்ற ரகசியத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார் அபிஷேக் கபூர்.

  எல்லா கண்களும்

  எல்லா கண்களும்

  பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் பாலிவுட்டில் அறிமுகம் என்பதால், ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் மீடியாக்களின் பார்வையும் சாரா அலி கான் மீதே விழுந்தன. நடிகர் சுஷாந்தை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதனால், மன ரீதியாக அப்போதே மிகவும் அவர் பாதிக்கப்பட்டார்.

  கால் பண்ணவில்லை

  கால் பண்ணவில்லை

  அந்த படம் ரிலீசாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில், 50க்கும் அதிக முறை தனது செல்போன் நம்பரை மாற்றியிருந்தார் சுஷாந்த். அவர் கடைசியாக பயன்படுத்தும் நம்பரை கண்டுபிடித்து அவருக்கு மெசேஜ் செய்தேன். நண்பா, மீண்டும் நமது கூட்டணியில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்று, ஆனால் அவர் ரிப்ளை செய்யவில்லை. கால் செய்தாலும், ரிங் போனது, பதிலுக்கு அவர் கால் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.

  இப்படி இருக்காதே

  இப்படி இருக்காதே

  பின்னர், ஒரு கட்டத்தில் அவரை சந்தித்த நான், மற்றவர்கள் புறக்கணிக்கின்றனர் என்பதால், இப்படி அப்செட்டாகாதே, அது உன்னை மிகவும் பாதிக்கும் என முன்னதாகவே எச்சரிக்கை செய்திருந்தேன். நடிகர்கள் மட்டுமின்றி என்னை போன்ற இயக்குநர்களும் பல முறை புறக்கணிக்கப் பட்டு இருக்கிறோம். ஆனால், வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என கடந்து போகாமல், அதிலேயே சிக்கித் தவித்தால், மிகப்பெரிய இழப்பாகவே முடியும் எனக் கூறினார்.

  இறுதிச்சடங்கில்

  இறுதிச்சடங்கில்

  கடந்த திங்கள் அன்று மும்பையில் உள்ள விலே பார்லே மையானத்தில் நடைபெற்ற சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதிச்சடங்கில் கேதார்நாத் பட இயக்குநரும், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பருமான இயக்குநர் அபிஷேக் கபூரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் அவசரப்பட்டுவிட்டாய் என்றே தான் கருதியதாக அபிஷேக் உருக்கமாக கூறியுள்ளார்.

  English summary
  Director Abhishek Kapoor has said in an interview that Sushant Singh Rajput was very troubled while filming Kedarnath, and became reclusive after its release.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X