»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தான் டைரக்ட் செய்துள்ள படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததைக் கண்டித்து, அதன் இயக்குநர் புகழேந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம், மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜின் முயற்சியால் கைவிடப்பட்டது.

தாய் மூவி மேக்கர்ஸ் சார்பில் தா.வெள்ளையன் காற்றுக்கென்ன வேலி என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை புகழேந்திஇயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது போல் இருப்பதாகக் கூறி, தணிக்கைக் குழுவினர் கடந்த 5 மாதங்களாக,இப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் அளிக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

இதைக் கண்டித்து இப்படத்தின் இயக்குநர் புகழேந்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக சிலர்தென்னிந்திய வர்த்தக சபை வளாகத்திலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தெலுங்கு திரைப்பட இயக்குநரும், ராஜ்யசபா எம்.பி.யுமான தாசரி நாராயணராவ் சென்னை வந்து இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர்,மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு இதுகுறித்து பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.

இதை விசாரித்த சுஷ்மா சுவராஜ் காற்றுக்கென்ன வேலி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும்என்றார். இதையடுத்து புகழேந்தி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

Read more about: chennai, cinema, director

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil