For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “சுஷ்மிதா சென் பணத்துக்காக போகிற ஆள் இல்ல”:ஷக்கல பேபிக்கு முன்னாள் காதலர் கொடுத்த சர்டிபிகேட்!

  |

  மும்பை : சுஷ்மிதா சென் 'Gold Digger' இல்லை 'Love Digger' விமர்சனங்களுக்கு முன்னாள் காதலர் விக்ரம் பாட் பதிலடி.

  Recommended Video

  Sushmitha Sen Lalit Modi Dating காதல் கதை

  சுஷ்மிதா சென் எப்போதும் பணத்திற்காக அழைபவர் இல்லை, அவரிடம் உண்மையான காதலை எதிர்பார்க்கலாம் - விக்ரம் பாட்.

  பிரபலமாக இருந்தால் அவர்களை வறுத்தெடுப்பதில் நெட்டிசன்களுக்கு என்ன லாபம். உண்மை எல்லாருக்கும் தெரிய வேண்டுமா என்ன?

  டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று கிடையாது...சோதனையில் உறுதியானது டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று கிடையாது...சோதனையில் உறுதியானது

  எல்லை கடந்த காதல்

  எல்லை கடந்த காதல்

  கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங்கில் உள்ளதாக ஐபில் முன்னாள் நிறுவனர் லலித் மோடி ட்வீட் செய்திருந்தார். இருவரும் மாலத்தீவில் மிக நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரத்தை நெத்திலி மீன் வறுவலாக கையில் எடுத்த நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

  பணத்துக்காக தானே எல்லாம்!

  பணத்துக்காக தானே எல்லாம்!

  ஒருகட்டத்தில் சுஷ்மிதா சென் பணத்திற்காக தான் லலித் மோடியின் பின்னால் சுற்றுவதாக எல்லை மீறி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் கடுப்பான சுஷ்மிதா சென், "நான் நானாகவே இருக்கிறேன்... எனது மனசாட்சி நடுநிலையானது. சில நேரங்களில் தங்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொள்ளும் மனிதர்கள் மலிவான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்" என தெரிவித்திருந்தார்.

  சுஷ்மிதா சென் ஒரு காதல் யோகி

  சுஷ்மிதா சென் ஒரு காதல் யோகி

  ஆனாலும், தொடர்ந்து சுஷ்மிதா சென் மீது தரக்குறைவான விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்க, அவரது முன்னாள் காதலன் விக்ரம் பாட் இப்போ பொங்கி எழுத்துவிட்டார். 1990களின் காலக்கட்டத்தில் மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்த விக்ரம் பாட் - சுஷ்மிதா சென் ஜோடி, காலப்போக்குல கஷாயம் போல கசப்பாகி பிரிந்தும் போனாங்க. இருந்தாலும் இதெல்லாத்தையும் மனசுல வச்சுக்காத மனுசன் விக்ரம் பாட், "சுஷ்மிதா சென் ஒருபோதும் பணத்துக்காக காதலிப்பவர் இல்லை, அவர் எப்பவுமே கடைசியா தான் பேங்க் பேலன்ஸ் பத்தி யோசிப்பாங்க" என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  காதல்ன்னா இதுதான்யா காதல்

  காதல்ன்னா இதுதான்யா காதல்

  அதுமட்டும் இல்லாம "ஒருநேரத்துல என்கிட்ட பணமே இல்லாதப்போ, சுஷ்மிதா சென் தான் தன்ன அமெரிக்காவிற்கு அழைச்சிட்டுப் போனதாவும், அத ஒருபோதும் தான் மறக்கவே மாட்டேன்" அப்படின்னும் விக்ரம் பாட் ரொம்பவே நெகிழ்ச்சியா பொங்கியிருக்கார். அதேபோல், சுஷ்மிதா சென் ‘Gold Digger' அதாவது பணம் பறிப்பவர் என்பது மாதிரியான வசைபாடல்களும் அடுத்தடுத்து அதிகமாகின. அதற்கும் பதிலளித்துள்ள விக்ரம் பாட், சுஷ்மிதா சென் ‘Love Digger' அதாவது காதலை பறிப்பவர் என கூறியுள்ளார். கரீனா கபூர் சைஃப் அலிகானை திருமணம் செய்தபோதும் அவர் மீது இப்படியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்றும், இதுதான் நெட்டிசன்களின் பண்பாடு எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

  நெட்டிசன்களுக்கு செம்ம பல்பு

  நெட்டிசன்களுக்கு செம்ம பல்பு

  பணத்துக்காக அழைபவர்" என்கிற சுஷ்மிதா சென் மீதான கடுமையான விமர்சனங்கள், விக்ரம் பாட்டின் இந்த கருத்துகள் மூலம் சுக்குநூறா உடைஞ்சிடுச்சுன்னு சொல்லலாம். சரியான நேரத்துல தன்னோட முன்னாள் காதலிக்கு விக்ரம் பாட் கொடுத்த இந்த அக்மார்க் சர்டிஃபிகேட், நெட்டிசன்களோட தல வலிக்கு மாத்திரையா அமைஞ்சிருக்கு.

  English summary
  Sushmita Sen is not a person who seeks for money, you can expect true love from her. Also What is the profit of netizens in roasting the well known celebrities? Actress sushmita sen Ex-lover vikram bhatt question to social media trollers and netizens.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X