»   »  கல்யாணம், கள்ளத்தொடர்பு: வதந்தி பரப்புவோர் மீது ரித்திக்கின் மாஜி மனைவி பாய்ச்சல்

கல்யாணம், கள்ளத்தொடர்பு: வதந்தி பரப்புவோர் மீது ரித்திக்கின் மாஜி மனைவி பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் உள்ள சில அதிகாரம்படைத்தவர்கள் தன்னைப் பற்றி வதந்திகளை பரப்பிவிடுவதாக நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரித்திக் ரோஷனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சூசன் கான் அவரை பிரிந்து சென்றுவிட்டார். அவர்கள் முறைப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டனர். சூசனுக்கும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் தான் அவர் ரித்திக்கை பிரிந்து சென்றதாக பாலிவுட்டில் பலகாலம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சூசன் ரித்திக்கின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வேறு செய்திகள் வெளியாகின. இது குறித்து சூசன் கூறுகையில்,

பாலிவுட்

பாலிவுட்

பாலிவுட்டில் உள்ள சில அதிகாரம்படைத்தவர்கள் நான் என்னைப் பற்றிய வதந்திகள் மற்றும் பொய்களை பரப்புமாறு மீடியாவை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கதைகள்

கதைகள்

நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், காபி ஷாப்களில் சந்திப்புகள் நடப்பதாகவும் கதை கட்டிவிடுகிறார்கள். தவறான செய்தியை மீடியாவும் பொறுப்பில்லாமல் வெளியிட்டு வருகிறது.

சிங்கிள்

சிங்கிள்

குடும்பங்கள் மற்றும் மனிதர்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் இது. பொய்யான தகவல்களை பரப்புவதால் வருத்தமாக உள்ளது. நான் வேலை பார்க்கும் சிங்கிள் தாய். என் வாழ்க்கை முறை மீது பெருமை கொண்டவள் என்றார் சூசன்.

சூசன்

சூசன்

நானும் அர்ஜுன் ராம்பலும் நல்ல நண்பர்கள் மட்டுமே எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று சூசனும் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஆனால் பாலிவுட்காரர்களோ அவரைப் பற்றி வேறு விதமகாகத் தான் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

English summary
Sussanne Khan, ex-wife of Bollywood actor Hrithik Roshan, has denied reports of an impending wedding with 'one of Hrithik's close friends.' The interior designer she says the 'gossip hurts' as 'families and human feelings' are involved.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil