»   »  கபடி, கிரிக்கெட்டுக்கு அடுத்து ஃபுட்பால்.. சுசீந்திரனின் அடுத்த பட அறிவிப்பு!

கபடி, கிரிக்கெட்டுக்கு அடுத்து ஃபுட்பால்.. சுசீந்திரனின் அடுத்த பட அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதையோடு சுசீந்திரன்!- வீடியோ

சென்னை : இயக்குனர் சுசீந்தரன் புதிய முகங்களை வைத்து இயக்கும் 'ஏஞ்சலினா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு', 'பாண்டிய நாடு', 'நான் மகான் அல்ல', 'ஜீவா' போன்ற படங்கள் வெற்றி படங்களாகின. அவர் 2013-ம் ஆண்டு புதுமுகங்களை வைத்து 'ஆதலால் காதல் செய்வீர்' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் நல்ல வசூலையும், பாராட்டுகளையும் அவருக்கு வாங்கி தந்தது.

Sussenthirans next film based on football

இதனால் தற்போது அவர் புது முகங்களை வைத்து 'ஏஞ்சலினா'என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தான் தற்போது நிறைவடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சுசீந்திரன். இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது,


"எனது அடுத்த திரைபடமான 'ஏஞ்சலினா' படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிஷியன்ஸ், நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததையடுத்து அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார் சுசீந்திரன். அடுத்த படத்தை கால்பந்தை மையமாக வைத்து எடுக்க இருக்கிறாராம். இந்தப் படத்திற்கு நடிப்பதற்கு ஆர்வமுள்ள கால்பந்து விளையாட்டு வீரர்களைத் தேடி வருகிறார்.

English summary
Suseenthiran completed 'Angelina' movie shooting. Next, He doing a film based on football.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X