43வது திருமண நாள்.. டி.ராஜேந்தர் - உஷா திருமண புகைப்படங்கள்.. பலரும் பார்க்காத போட்டோஸ்!

சென்னை: இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என
பன்முகத் திறமை கொண்ட டி ராஜேந்தர், உஷா தம்பதிகள் இன்று தங்கள் 43வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது. 80களில் தான் தமிழ் சினிமாவில் நிறைய புரட்சிகள் நடந்தன. ஆனால், டிஆருக்கு நிகராக இன்னொருவரை சொல்லவே முடியாது. ஒரு நவீன அலையை உண்டாக்கி வரலாற்றில் இடம் பிடித்தார் டிஆர். ஒரு தலை ராகம் திரைப்படம் டி.ராஜேந்தரின் முதல் திரைப்படமாக இருந்தாலும், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை.

Simbu T Rajendar Usha

டி.ராஜேந்தர்: ஆனால் பல சிக்கல்களுக்கு இடையே ஒரு தலை ராகம் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தை கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்த உஷா தன் வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்டார். முதல் படத்திலேயே இருவருக்கும் இடையே காதல் மலர,1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம்: இதையடுத்து,1983ஆம் அண்டு டி.ராஜேந்தர் இயக்கிய படத்திற்கு உயிருள்ளவரை உஷா, என தனது மனைவியின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து, தன் மீதான காதலை வெளிப்படுத்தினார். இன்று வரை அந்தத் தலைப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் இல்லறம் நடத்தி வருகிறார் டி.ஆ. உயிருள்ளவரை உஷா பெயரில் ஒன்பது எழுத்துக்கள் வரும். அதன் பிறகு தான் எடுத்த அனைத்துப் படங்களின் பெயரும் ஒன்பது எழுத்தில் வருவது போல் பார்த்துக் கொண்டார் டி.ராஜேந்தர். தங்கைக்கோர் கீதம், உறவைக்காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், தாய் தங்கைப் பாசம், மோனிசா என் மோனலிசா, காதல் அழிவதில்லை என எல்லாமே ஒன்பது எழுத்து டைட்டில். கடைசியாக வெளிவந்த வீராச்சாமி மட்டும் விதிவிலக்காக அமைந்தது.

43வது திருமண நாள்: டி ராஜேந்தர், உஷா தம்பதிகளுக்கு சிலம்பரசன், குலரசன், இலக்கியா என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சிலம்பரசன், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். சிம்புக்கு 43வயதான போதும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். டிஆரின் ஒரே கவலை தன் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பது தான். இந்நிலையில், டி ராஜேந்தர், உஷா தம்பதிகள் இன்று தங்கள் 43வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X