twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு டி ராஜேந்தர் போட்டி!

    By Shankar
    |

    வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் நடிகரும் இயக்குநருமான டி ராஜேந்தர்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

    T Rajendar to contest in producer council election

    இவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடக்கிறது.

    இந்த முறை கலைப்புலி தாணு போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார்.

    புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந்தேதி வெளியிடப்படும்.

    இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.

    இவரது அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன், பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 21 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 3 அணி சார்பிலும் 63 பேர் மோதுகிறார்கள்.

    3 அணிகள் சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

    English summary
    Director T Rajendar has announced his contest in producer council election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X