போட்டி தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி.. டி.ராஜேந்தர் ராஜினாமா.. விநியோகஸ்தர் சங்கத்தில் தொடர்கிறார்

By

சென்னை: புதிதாகத் தொடங்கிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து டி.ராஜேந்தர் விலகி இருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன் வெற்றிபெற்றார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர், பி.எல்.தேனப்பன் தோல்வி அடைந்தனர்.

புதிய சங்கம்

புதிய சங்கம்

பின்னர் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் கூறிய டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கினார். இதன் முதற் செயற்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.

வகிக்கக் கூடாது

வகிக்கக் கூடாது

அவர் ஏற்கனவே சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வருகிறார். அதன் பதவி இருக்கும்போது மற்ற சங்கத்தில் பொறுப்பு வகிக்கக் கூடாது என விதி இருப்பதால், அவர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

நீடிக்க வேண்டும்

நீடிக்க வேண்டும்

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27 ஆம் தேதி காலை நடைபெற இருக்கிறது. செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.

ராஜினாமா செய்கிறேன்

ராஜினாமா செய்கிறேன்

அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதிய தலைவர்

புதிய தலைவர்

இந்நிலையில் டி.ராஜேந்தர் விலகியுள்ளதை அடுத்து, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளதாக, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X