வலிமை படம் பார்க்க போறீங்களா...அப்போ உஷாரா இருங்க...ரசிகர்களை எச்சரிக்கும் பிரபல டைரக்டர்
சென்னை : வலிமை படம் எப்போது ரிலீசாகும் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வலிமை படம் பார்க்க போகிறவர்களை உஷாராக இருக்க சொல்லி பிரபல டைரக்டர் ஒருவர் ட்விட்டரில் எச்சரித்துள்ளது அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமான வலிமை படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
வலிமை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களால் படத்தின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் வலிமை படம் எப்போது ரிலீசாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதிலும் முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வலிமை படம் பார்க்க போறீங்களா
இந்நிலையில் வலிமை படம் பார்க்க போகிறவர்களை கவனமாக இருக்கும் படி பிரபல டைரக்டரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். இவர் எதற்காக இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார் என பலரும் ஷாக் ஆகி உள்ளனர். இருந்தாலும் இவரது ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

உஷாரா இருங்க ரசிகர்களே
ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பதிவில், வலிமை படம் பார்க்க போறீங்களா...அப்படியானால் இந்த சீனில் உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். சாரின் உச்சபட்ச அதிரடி ஆக்ஷன் தெறிக்கிறது. அவரது கண்களில் அனல் பறக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 24 ல் வரும் வலிமையை கொண்டாடுவீர்கள் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்பார்ப்பு தாங்க முடியல...இதுல இவர் வேற இப்படி சொல்கிறாரே என பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

எந்த சீனை சொல்கிறார்
அப்படி எந்த சீனை ஆதிக் சொல்லி இருப்பார். படம் முழுவதுமே அதிக ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என சொல்லி இருக்கிறார்கள். இதில் இவர் சொல்வது எந்த சீனை என தெரியவில்லையே. ஏற்கனவே படம் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனங்களே படத்தை உடனே பார்க்க வேண்டும் என ஆர்வத்தை தூண்டுகிறது. இதில் இப்படி ஒரு வார்த்தையை கூறி உள்ளாரே என அனைவரும் ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர்.

யார் இந்த ஆதிக் ரவிச்சந்திரன்
த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பல முகங்களைக் கொண்ட ஆதிக் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் விஷ்வா கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது பகீரா, விஷாலின் மார்க் ஆன்டனி ஆகிய படங்களை எழுதி, இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
Recommended Video

ஆர்வத்தை தூண்டிய ட்வீட்
வலிமை படத்தில் அஜித்தின் அசத்தலான ஸ்டில் உடன் ஆதிக் வெளியிட்டுள்ள இந்த ட்வீட் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. அஜித் கூட நடித்த நடிகரே இப்படி சொல்லி உள்ளார் என்றால், ஆக்ஷன் காட்சிகள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











