யாஷிகா மேடம் கூல் சுரேஷை காரில் ஈசிஆர் ரைடு கூட்டிட்டு போங்க..கடுப்பாகி பாய்ந்த நெட்டிசன்

வெந்து தணிந்தது காடுன்னு போகும் இடமெல்லாம் கடுப்படிக்கும் கூல் சுரேஷ் மீது பாய்ந்து பிராண்டி இருக்கிறார் நெட்டிசன் ஒருவர்.

சிம்புவின் தீவிர ரசிகரும், அவரது தந்தை டி.ராஜேந்தரின் அபிமானியுமான கூல் சுரேஷ் எங்கு போனாலும் வெந்து தணிந்தது காடு என்கிற வசனத்தை பேசுவார்.

இதை வைத்து அவரை சிலர் பிராங்கும் செய்துள்ளனர். நெட்டிசன்கள் ட்ரோலும் செய்துள்ளனர். ஏதோ ஒருவகையில் அவர் பிரபலமடைந்துள்ளார்.

பிரபலங்களின் தாசானு தாசர்கள்

பிரபலங்களின் தாசானு தாசர்கள்

திரையுலகில் பிரபலங்களின் அபிமானிகளாக ரசிகர்கள் மாறுவது இயற்கையான ஒன்றுதான். ரசிகர்கள் விசுவாசியாகி பின்னர் அவரது அபிமானிகளாகவே மாறிவிடுவார்கள். நடிகர்களில் எம்ஜிஆர் தான் முதன் முதலில் தன்னுடைய ரசிகர்கள் அபிமானம் பெற்று அரசியலில் கால்பதித்து பின்னர் ஆட்சியையும் பிடித்தார். தன்னுடைய ரசிகர்மன்ற அனுதாபிகளுக்கு பதவியும் அளித்தார். அதேபோல் விஜயகாந்த் தன்னுடைய ரசிகரான சைக்கிள் கடை வைத்திருந்த நல்லத்தம்பி, ரசிகர் மன்ற தலைவர்கள் பலரை சட்டமன்ற உறுப்பினாராக்கினார். இதுபோன்று பல உதாரணங்களைச் சொல்லலாம்.

டி.ராஜேந்தரின் அபிமானி கூல் சுரேஷ்

டி.ராஜேந்தரின் அபிமானி கூல் சுரேஷ்

நடிகர்களின் அபிமானிகளாக வருபவர்கள் ஒரு கட்டத்தில் தங்கள் பெயருக்கு முன்னால் தங்கள் விரும்பும் நடிகர்களின் பெயரை இணைத்துக் கொள்வதும் உண்டு. சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு அபிமான நடிகரின் பெயரை சூட்டுவார்கள். சிலர் தங்கள் அபிமான நடிகர் நடிகைகளுக்கு கோயில் கட்டி கும்பிட்டும் வருகின்றனர். சிலர் வாழ்நாள் முழுவதும் தங்கள் அபிமான நடிகரின் ரசிகர்களாக இருப்பார்கள். சில முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அவருடனே பயணித்து அவரது மன்றத்தில், கட்சியில் பெரிய பொறுப்பை வாங்குவார்கள். இதே போல் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் டி ராஜேந்திரன் அபிமானி சுரேஷ் என்கிற கூல் சுரேஷ். சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். எப்பொழுதும் டி. ராஜேந்திருடன் இருப்பார்.

ஒரு வார்த்தையில் ஓஹோ வாழ்க்கை..கூல் சுரேஷ் கெத்து

ஒரு வார்த்தையில் ஓஹோ வாழ்க்கை..கூல் சுரேஷ் கெத்து

சிம்பு நடித்து விரைவில் வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டிலை போகும் இடமெல்லாம் சொல்லி, சொல்லி பிரபலபடுத்திவிட்டார். எந்த பிரச்சினையும் என்றாலும் வெந்து தணிந்தது காடு என்று கூறி ஒரு ஓ போடு என்று சொல்வார். கடைக்கு சென்று அரிசி வாங்க வேண்டும் என்றால் கூட வெந்து தணிந்தது காடு இரண்டு கிலோ அரிசி போடு என்று சொல்வார் போல. அந்த அளவிற்கு வெந்து தணிந்தது காடு அவரது அவரது நாவில் ஓட்டிக் கொண்டு விட்டது. கூல் சுரேஷ் பேசுவது சமூக வலைத்தளங்களில் வைரலானது. யூடியூபர்களுக்கு அவர் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தார். புதிய படம் வெளியீட்டின்போது ஆடியோ, ட்ரெய்லர் வெளியீடு, பட விழாக்களில் கூல் சுரேஷ் தலைக்காட்ட ஆரம்பித்தார்.

என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசும் கூல் சுரேஷ்

என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசும் கூல் சுரேஷ்

படம் வெளியாகும் தினத்தன்று முதல் நாள் முதல்காட்சியில் தங்கள் பட ப்ரமோட்டராக கூல் சுரேஷை பட நிறுவனத்தினர் பயன்படுத்திக்கொண்டனர். இதனால் அனைத்து படங்களுக்கும் வெந்து தணிந்தது காடு ஒரு ஓ போடுன்னு கூல் சுரேஷ் கூலாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் பாஸ் பார்க் கொடுத்தார். பல நேரம் இது ட்ரால் செய்யப்பட்டது. பல நேரம் தான் என்ன பேசுகிறோம் என்பது பற்றி அறியாமல் கண்ட்படி பேசுவது கூல் சுரேஷின் வாடிக்கையாக அமைய, ஒரு மேடையில் அவர் பொது இடத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை மேடையில் பயன்படுத்த கே.ராஜன் உடனடியாக எழுந்து வந்து கூல் சுரேஷை அமரச்சொல்லிவிட்டு மைக்கை வாங்கி மன்னிப்பு கோரி புத்தி சொன்னார்.

ஷங்கர் மகளை காதலிப்பதாக சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்ட கூல் சுரேஷ்

ஷங்கர் மகளை காதலிப்பதாக சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்ட கூல் சுரேஷ்

அதேபோன்று சமீபத்தில் வெளியான விருமன் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து பேட்டி அளித்த கூல் சுரேஷ் கதையின் நாயகி அதீதியை தான் காதலிப்பதாகவும், இயக்குனர் சங்கர் தங்கள் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். அவர் விளையாட்டுக்காக பேசினாலும் இவ்வாறு பேசியது சினிமா இண்டஸ்ட்ரியல் கேலிப் பொருளாக மாறியது. இதை கேள்விப்பட்டு இயக்குநர் சங்கர் தரப்பில் அவரை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. இதை எடுத்து தனது பேச்சுக்கு மிகுந்த வருத்தத்தை அவர் தெரிவித்துக் கொண்டார்.

கடுப்பான நெட்டிசன் யாஷிகாவுக்கு வைத்த கோரிக்கை

கடுப்பான நெட்டிசன் யாஷிகாவுக்கு வைத்த கோரிக்கை

இந்த நேரத்தில் சமீபத்தில் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் திருமணத்தில் கலந்துக்கொண்ட கூல் சுரேஷ் அங்கும் தனது வெந்து தணிந்தது காடு டைட்டிலை அட்டையில் எழுதி பிடித்துக்காட்ட அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக கடுப்பாகிய ஒருவர் நெட்டிசன் ஒருவர் நடிகை யாஷிகாவுக்கு ஒரு கோரிக்கையாக கூல் சுரேஷை இசிஆர் சாலையில் காரில் ஒரு ரவுண்ட் கூட்டிச் செல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நடிகை யாஷிகா சில ஆண்டுகளுக்கு முன் தனது தோழியுடன் ஈசிஆர் சாலையில் காரில் சென்றபோது கார் சென்டர் மீடியனில் மோதியதில் உடன் சென்ற தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன் கூல் சுரேஷையும் அவ்வாறு ஈசிஆர் ரோட்டில் காரில் ரைடு அழைத்துச் செல்லும்படி சூசகமாக குறிப்பிட்டுள்ளது தற்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X