»   »  கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பாகுபலி 2 படத்தில் இறக்கியிருக்கும் தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது முழுத் திறமையையும் பாகுபலி 2 படத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இந்த படத்தை தான் தமன்னா பெரிதும் எதிர்பார்க்கிறார்.

தமன்னா

தமன்னா

பாகுபலி 2 படத்தில் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை அளித்துள்ளார் ராஜமவுலி. நானும் என் திறமை முழுவதையும் பயன்படுத்தி நடித்துள்ளேன் என்கிறார் தமன்னா.

திறமை

திறமை

பாகுபலி 2 படத்திற்காக குதிரை ஏற்றம், சண்டை பயிற்சி, வாள் வீச்சு ஆகிய பயிற்சிகள் எடுத்துள்ளேன். படத்தில் நீங்கள் என் முழு திறமையையும் பார்ப்பீர்கள் என்று தமன்னா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி படம் மூலம் இந்தியா மட்டும் அல்ல உலக அளவில் என்னை பிரபலமாக்கிய ராஜமவுலிகாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.

விக்ரம்

விக்ரம்

விஜய் சந்தர் சீயான் விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் தமன்னா தான் நாயகி. இது தான் தற்போது தமன்னா கையில் இருக்கும் ஒரே படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamanna has said that she has expressed her full potential in her upcoming movie Baahubali 2 directed by SS Rajamouli. Baahubali is set to hit the screens on april 28.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil