»   »  ஐஸ்வர்யாவுக்கு சரமாரி அடி!

ஐஸ்வர்யாவுக்கு சரமாரி அடி!

Subscribe to Oneindia Tamil


நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், ஜூனியர் நடிகை ப்ரீத்தி உண்ணி என்பவருக்கும் ஹோட்டலில் டான்ஸ் ஆடும்போது மோதல் ஏற்பட்டது. இதில் ப்ரீத்தி உண்ணி, தனது அடியாட்களுடன் வந்து ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தார்.

Click here for more images

நடிகை ஐஸ்வர்யா தற்போது முன்பு போல நடிப்பதில்லை. முன்பு தனது தாயாருடன் கோபம் கொண்டு தனித்து வசித்து வந்த ஐஸ்வர்யா, லட்சுமியுடனேயே தற்போது சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவில் சென்றார் ஐஸ்வர்யா. அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். டான்ஸ் ஆடும்போது அங்கு ஆடிக் கொண்டிருந்த ப்ரீத்தி உண்ணி என்கிற ஜூனியர் நடிகையுடன் ஐஸ்வர்யாவுக்கு தகராறு ஏற்பட்டது.

இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனர். அபபோது ப்ரீத்தியை, ஐஸ்வர்யா கடுமையாகத் திட்டி கேவலப்படுத்தியதாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்து கிளம்பினார் ஐஸ்வர்யா. அவர் திட்டியதால் கடுப்பான ப்ரீத்தி உண்ணி, அங்கு தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் சில அடியாட்களுடன் ஐஸ்வர்யாவின் காரைப் பின் தொடர்ந்தார்.

ஒரு இடத்தில் ஐஸ்வர்யாவின் காரை அவர்கள் மடக்கி நிறுத்தினர். பின்னர் ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டனர்.

அடிபட்ட ஐஸ்வர்யா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து ப்ரீத்தி உண்ணியையும், அவரது அடியாட்களையும் தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் துணை நடிகை மற்றும் அவரது அடியாட்களிடம் ஐஸ்வர்யா அடி வாங்கிய சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: aishwarya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil