twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி நடிப்பில் "நெஞ்சுக்கு நீதி" திரைப்படம் ....கருத்துக்களை சொன்ன பிரபலங்கள்

    |

    சென்னை : "நெஞ்சுக்கு நீதி" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பலவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    Recommended Video

    கோபப்பட்ட Gayathri Raghuram | என்னை கேள்வி கேட்காதீர்கள் | Filmibeat Tamil

    இதற்கு நடுவே உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிரத்தியேகமாக சென்னையில் திரையிடப்பட்டது.

    படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் மூலமாகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் சிலர் கூறிய கருத்துக்களை இங்கே நாம் பார்ப்போம்.

    மாரி செல்வராஜ் ரொம்ப மோசம்.. 50 டேக் எடுக்கிறார்... 'மாமன்னன்' பட அனுபவம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!மாரி செல்வராஜ் ரொம்ப மோசம்.. 50 டேக் எடுக்கிறார்... 'மாமன்னன்' பட அனுபவம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!

    காயத்ரி ரகுராம்

    காயத்ரி ரகுராம்

    ஜாதி சம்பந்தப்பட்ட பல விஷயங்களை இந்தப்படம் சொல்லியுள்ளது, நான் மிகவும் ரசித்தேன். இந்துக்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மிகவும் அழுத்தமாக பல வசனங்கள் மூலம் சொல்லிய படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இந்த படத்தை இந்தியில் பார்க்கும்பொழுது மிகவும் ரசித்தேன். அதே படத்தை தமிழ் ரீமேக் செய்து தமிழ் மக்களுக்காக கொடுத்திருக்கும் இந்த விதம் இன்னும் அதிகமாக ரசிக்க வைக்கிறது. அரசியல் ரீதியாகவும் இந்தப்படம் இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் கொல்லப்பட்ட மிக முக்கியமான வசனம் என்னை மிகவும் ஈர்த்தது. அதுவும் குறிப்பாக (தேசிய மொழியாக ஒன்றிருக்க வேண்டும்- அது என்னவென்றால் " சட்டம்") . அனைவரும் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் தெரிந்திருக்க வேண்டும் இந்த படம் சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்று என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

    பிக் பாஸ் ஜூலி

    பிக் பாஸ் ஜூலி

    இப்படி ஒரு முயற்சி எடுத்த இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்த கதையின் நாயகன் உதயநிதி அவர்களுக்கு ஹேட்ஸ் ஆப். இந்த படத்தை நான் காட்சிக்கு காட்சி மிகவும் ரசித்தேன். பிக் பாஸ் சுரேஷ் தாத்தா ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். தமிழ்நாட்டில் இனி ஆர்டிகல் 15 என்றால் அனைவரும் தெரிந்து கொள்ளும் படி புரிந்து கொள்ளும்படி எளிமையாக வசனங்கள் மூலம் சொன்ன இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. படம் பார்த்து முடித்து இரவு தூங்கும் போதும் கூட பல நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட வசனங்களும் காட்சியமைப்பும் இந்த படத்துக்கு இருக்கிறது என்பது மிகவும் சிறப்பு. அனைவரும் கண்டிப்பாக தியேட்டர் சென்று இந்த படத்தை பாருங்கள் என்று பிக் பாஸ் ஜூலி தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பாளர் சௌத்ரி

    தயாரிப்பாளர் சௌத்ரி

    சந்தானம் நடித்த டக்கால்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் டிரைவர் ஜமுனா போன்ற படங்களின் தயாரிப்பாளர் எஸ் பி சவுத்ரி "நெஞ்சுக்கு நீதி" படம் அதன் காட்சிகள் போன்றவை, சாட்டையடி வசனங்கள் இது தரமான சம்பவம் என்று சொல்லி A MUST WATCH FILM... Expecting மாமன்னன் என்று உதயநிதியின் அடுத்த படத்திருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ரக்ஷன் (குக் வித் கோமாளி)

    ரக்ஷன் (குக் வித் கோமாளி)

    ஒரு கிரைம் திரில்லர் படத்தை உதய் அண்ணா சூப்பராக செய்துள்ளார். அவருடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் மிகவும் அட்டகாசமாக இருந்தது. படத்தைப் பற்றி நிறைய நிறைய பாசிட்டிவ் ரீவ்வியூஸ் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றார்போல இருக்கும் படம்தான் நெஞ்சுக்கு நீதி. உண்மையிலேயே படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கிரைம் திரில்லர் என்று சொல்லும்பொழுது எந்தளவுக்கு சுவாரஸ்யம் தேவையோ- அந்த அளவுக்கு காட்சிகள் இருந்தது அதுமட்டுமல்லாமல் இந்த சமூகத்தில் மிகவும் தேவையான சம உரிமை, சம நிலையைப் பற்றி பேசிய இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது. படத்துடைய வசனங்கள் மிகவும் சூப்பர். சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் ஆர்வத்தை இந்த கிரைம் திரில்லர் ஸ்கிரீன்பிளே என்னை மிகவும் ரசிக்க வைத்தது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம்தான் நெஞ்சுக்கு நீதி என்று ரக்ஷன் பெருமையாகப் பேசினார்.

    வி.ஜே பார்வதி

    வி.ஜே பார்வதி

    மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும் என்று பெரியார் சொல்வதுபோல் இந்தப்படம் "நெஞ்சுக்கு நீதி" மிகவும் எதார்த்தமான பல உண்மைகளை சொன்ன மிக முக்கியமான படம். அனைவரும் சமம் என்று வெறும் வார்த்தைகள் மட்டும் பேசாமல் அது ஒரு படமாக எடுக்கப்பட்டு அனைவரையும் ரசிக்க வைத்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இதில் பேசப்பட்ட அரசியல் மற்றும் சமூக நீதி கண்டிப்பாக அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். அனைவரும் சமம் என்கின்ற இந்த புரிதலை மக்களுக்கு எடுத்துரைக்க இதுபோன்ற இன்னும் இன்னும் நிறைய படங்கள் வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட நீதி கொள்கை போன்ற விஷயங்களை பேசும் படங்களையும் அவ்வப்போது எல்லோரும் பார்க்க வேண்டும் என்பது எனது சொந்த கருத்து. உதயநிதி அரசியலில் இருக்கிறார் என்பதற்காக மட்டும் அவர் சொல்லும் கருத்துக்களை வேறுவிதமாக பார்க்காமல் ஒரு நல்ல திரைப்படமாக இதை அனைவரும் ரசிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று வி ஜே பார்வதி கூறியுள்ளார்.

    English summary
    Tamil Celebrities Comments on Udhayanidhi Stalin’s Nenjuku Neethi Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X