twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிலிம்சேம்பரில் மோதல்... தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் முடிவு!

    By Shankar
    |

    சென்னை: பிலிம் சேம்பர் தேர்தலில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. பிலிம்சேம்பர் நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கே. ராஜன் கூறுகையில், "தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் நாளை மறுதினம் (27-ந்தேதி) நடக்கிறது.

    இதில் எங்கள் அணி சார்பில் தலைவராக விஜயகுமார் போட்டியிடுகிறார். துணைத் தலைவராக நானும் செயலாளராக கமீலா நாசரும், பொருளாளராக உட்லண்ட்ஸ் வெங்கடேசும் மேலும் 16 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியிடுகிறோம்.

    இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவரே 150 ஓட்டுகள் போடும் பிராக்சி முறை மூலம் கல்யாண் ஆதரிக்கும் அணியினர் வெற்றி பெற முயற்சிக்கின்றனர். 650 பிராக்சிகளை அவர்கள் வைத்துள்ளனர். கல்யாண் தொடர்ந்து இந்த பிராக்சி முறை மூலம்தான் தலைவராக இருக்கிறார்.

    கல்யாண் சினிமா நூற்றாண்டு விழா நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது. விழா நடந்த நேரு ஸ்டேடியத்தை சுத்தம் செய்ய ரூ.75 லட்சம் செலவிட்டதாகவும் பிஸ்கட் வாங்க ரூ.20 லட்சம் செலவிட்டதாகவும் கணக்கு எழுதியுள்ளனர்.

    தெலுங்கு நடிகர்களை அழைத்து வரவும் பல கோடி செலவு செய்துள்ளனர். முதல்வர் ரூ.10 கோடி கொடுத்தார், விழாவுக்காக ரூ.12 கோடி வசூலானது. இவ்வளவுக்கு பிறகும் ரூ.2.5 கோடி நஷ்ட கணக்கு காட்டி உள்ளனர்.

    எனவே பிலிம் சேம்பர் தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் திரையுலகினர் முடிவு செய்துள்ளோம்," என்றார்.

    English summary
    Tamil cinema has decided to boycott Film Chamber election due to the malpractices of present office bearers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X