»   »  மழை வெள்ளத்தால் தமிழ் சினிமாவுக்கு நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

மழை வெள்ளத்தால் தமிழ் சினிமாவுக்கு நஷ்டம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த வாரம் முழுக்க பெய்த மழை வெள்ள பாதிப்பில் தமிழ் திரையுலகம் திண்டாடிப் போனது.

இந்த மழை வெள்ளத்தால் மொத்தம் ரூ 25 கோடிக்கு மேல் வசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை தொடர்ந்து பெய்ததது. அடையாறு, கூவம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு, வீடுகளுக்குள் வெள்ளம், உடமைகள் இழப்பு என்று மக்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள்.

தியேட்டர்களில் மழை வெள்ளம்

தியேட்டர்களில் மழை வெள்ளம்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் அவை மூடப்பட்டன.

கூட்டமே இல்லை

கூட்டமே இல்லை

இதனால் புதிய படங்கள் ஓடாமல் வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் படங்கள் பெயருக்கு ஓடின. கூட்டமே இல்லை.

புதிய படங்கள்

புதிய படங்கள்

ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்த ‘இஞ்சி இடுப்பழகி' மற்றும் ‘மொழி' படம் மூலம் பிரபலமான ராதாமோகன் இயக்கிய ‘உப்பு கருவாடு', சிவா நடித்த ‘144' ஆகிய படங்கள் பெருமழைக்கு மூன்று நாட்கள் முன்பாக கடந்த மாதம் 27-ந்தேதியன்று வெளியாகின.

நஷ்டம்

நஷ்டம்

இந்த 3 படங்களும் மழை வெள்ளத்தால் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி' எதிர்ப்பார்த்தபடி ஓடவில்லை.

உறுமீன்

உறுமீன்

தமிழகமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்திலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பாபிசிம்ஹாவின் ‘உறுமீன்' படம் வெளிவந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி வெள்ளம் வடியவில்லை. சென்னை மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவும் இல்லை. இதனால் அந்த படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் படங்கள்

தீபாவளிப் படங்கள்

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்', அஜீத்குமாரின் ‘வேதாளம்' படங்கள் இரண்டு வாரங்கள் நன்றாக ஓடின. ஆனால் அடுத்த இரு வாரங்களில் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

ரூ 25 கோடி

ரூ 25 கோடி

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது ‘மழை வெள்ளம், தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருந்த படங்களின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது' என்றார்.

English summary
According to box office sources, Tamil cinema has incurred Rs 25 cr loss due to recen rain and flood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil