twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளர் சங்கத்தில் உச்சகட்ட மோதல்.. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கத் தடை!

    By Shankar
    |

    சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நாளுக்கு நாள் வலுத்து வந்த மோதல், இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    கேயார் தலைமையிலான நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் பொருளாளருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கவுன்சிலின் வங்கிக் கணக்கை கிட்டத்தட்ட முடக்கி வைத்துள்ளது உயர் நீதிமன்றம்.

    Tamil film producer council in big trouble

    தயாரிப்பாளர்களின் நலன் காக்க என்று கூறி ஆரம்பிக்கப்பட்டது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் இந்த சங்கத்தின் நிர்வாகத்தில் இருப்பவர்களோ படமே தயாரிக்காத முன்னாள் தயாரிப்பாளர்கள்.

    ஏகப்பட்ட அரசியல் பிரச்சினைகள், உள்ளடி வேலைகள் அரங்கேறும் இடமாக தயாரிப்பாளர் சங்கம் மாறிவிட்டது.

    கடந்த முறை எஸ் ஏ சந்திரசேகரன், தாணு கோஷ்டி பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளும், கேயார் - சிவா தினம் ஒரு வழக்கு, பஞ்சாயத்து, போட்டி பிரஸ் மீட் என நடத்திக் கொண்டிருந்தார்கள்.

    இந்த முறை பதவிக்கு வந்த கேயார் - சிவா கோஷ்டியை, விட்டேனா பார் என தாணு அணி நீதிமன்றங்களுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது.

    இதற்கு நடுவில், சின்னப் படத் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியான ஆர் ராதாகிருஷ்ணன், தனி ட்ராக்கில் ஒரு பிரச்சினையை உருவாக்கி வைத்துள்ளார்.

    இவர்தான் சங்கத்தின் பொருளாளர். ஆரம்பத்தில் கேயார் அணியில் இருந்தவர், இப்போது கேயார் அணிக்கு மெயின் வில்லனாகிவிட்டார். இதனால் இவரது கையெழுத்தில்லாமல் சங்கத்தின் செலவுகளுக்கு நயா பைசா எடுக்க முடியவில்லை வங்கியிலிருந்து.

    எனவே ராதாகிருஷ்ணன் கையெழுத்து இல்லாமலேயே காசோலைகளில் தாங்கள் கையெழுத்திட்டு பணம் எடுக்க வகை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கேயார் அணி வழக்கு தொடர, அதை எதிர்த்து பதில் வழக்கு தொடர்ந்தால் ராதாகிருஷ்ணன்.

    அதில், "சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கி கிளையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் கணக்கு உள்ளது. இந்த வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் கவுன்சிலின் பொருளாளரின் கையொப்பம் அவசியம் தேவை. ஆனால் தற்போது இந்த கவுன்சிலின் நிர்வாகிகளாக இருப்பவர்கள், பொருளாளரின் கையொப்பம் இல்லாமலேயே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

    ராதாகிருஷ்ணன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சிலம்பரசன், 'தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் விதி 23(இ)-யின்படி, கவுன்சில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவேண்டும் என்றால் அதற்குரிய காசோலையில் பொருளாளர் கையெழுத்து அவசியமாகும். ஆனால், பொருளாளர் கையெழுத்து இல்லாமல் கவுன்சில் நிர்வாகிகள் பணத்தை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று வாதிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி தமிழ்வாணன்,"மனுதாரரின் கோரிக்கைக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது என்று முடிவு செய்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள், கவுன்சிலின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கிறேன்," என்று உத்தரவிட்டார்.

    இன்னொரு பக்கம் சங்கத் தலைவர் கேயார் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார் தாணு. அதை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்டி தோற்கடிக்காவிட்டால் கேயார் பதவிக்கு ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Madras highcourt has been banned producer council president Keyaar team to withdraw money without the sign of treasurer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X