»   »  டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதம்.. உதயநிதி, ஜீவா, சந்தானம், ஆர்யா பங்கேற்றனர்

டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதம்.. உதயநிதி, ஜீவா, சந்தானம், ஆர்யா பங்கேற்றனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் நடிகர் சங்கத்தினர் இன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

க்யூப், யு.எப்.ஓ. மற்றும் பி.எக்ஸ்.டி. ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு செலவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. எனவே, இதற்கு தயாரிப்பாளர்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, அதிக கட்டணத்தை இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் வசூலிப்பதை கண்டித்தும், விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனங்கள் வசூலித்த ரூ.400 கோடி பங்கு தொகையை வழங்க வலியுறுத்தியும், இரு டிஜிட்டல் நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தக்கோரியும் திரை உலகம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடைபெற்றது.

வள்ளுவர் கோட்டம்...

வள்ளுவர் கோட்டம்...

நுங்கம்பாக்கம் வள்ளூவர் கோட்டம் அருகில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. இதற்காக அங்கு விசேஷ சாமியானா பந்தல் போடப்பட்டு மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது.

ஒருநாள் உண்ணாவிரதம்..

ஒருநாள் உண்ணாவிரதம்..

சுற்றிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேனர்கள் வைத்து இருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

தலைமை...

தலைமை...

நடிகர் சங்க தலைவர் நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ‘பெப்சி' தலைவர் ஜி.சிவா ஆகியோர் தலைமையில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஆர்யா ஜீவா சந்தானம்

ஆர்யா ஜீவா சந்தானம்

நடிகர்களில் ஆர்யா, ஜீவா, சந்தானம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே சமயம், மிகப் பெரிய நடிகர்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை.

திரைப் பிரபலங்கள்...

திரைப் பிரபலங்கள்...

இதில், நடிகர்கள் விஜயகுமார், விவேக், சரவணன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் எஸ்.கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதா கிருஷ்ணன், டைரக்டர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், டைரக் டர்கள் மனோஜ்குமார், ரமேஷ்செல்வன், வி.சேகர், தயாரிப்பாளர்கள் இப்ராகிம் ராவுத்தர், சிவசக்தி பாண்டியன், அழகன் தமிழ்மணி, ருங்மாங்கதன், சுப்பையா, கப்பார், சவுந்தர், பிரமிடு நடராஜன், சினிமா மக்கள் தொடர்பாளர் சங்க நிர்வாகிகள் டைமண்ட்பாபு, விஜய முரளி, மவுனம்ரவி, கணேஷ் குமார், சிங்காரவேலன், நடிகர் சங்க மானேஜர் நடேசன், தயாரிப்பாளர்கள் கில்டு செயலாளர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

English summary
The Tamilnadu film producers association along with actors union is contesting an one day hunger strike at Chennai for condemning the price hike of cinema digitalization.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil