twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெப்சி – தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே உச்சகட்ட மோதல்... உறவை முறிப்பதாக அறிவிப்பு

    |

    சென்னை : பெப்சி - தயாரிப்பாளர்கள் சங்கம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இதன் விளைவாக, இரு தரப்பிற்கும் இடையேயான உறவை முறித்துக் கொள்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

    Recommended Video

    FEFSI ஊழியர்களுக்கு எதிராக நடிகர் அஜித் இருப்பதாக RK செல்வமணி புகார்

    Moon Knight Episode 4: இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா ரேஞ்சுக்கு இருக்கே!Moon Knight Episode 4: இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா ரேஞ்சுக்கு இருக்கே!

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சனை நடப்பது, போராட்டம் நடப்பது வழக்கமான விஷயம் தான் என்றாலும் இது தற்போது உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

     ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிவிப்பு

    ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிவிப்பு

    ஊதிய உயர்வு கேட்டு பெப்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பெப்சி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

     மறுத்த தயாரிப்பாளர் தரப்பு

    மறுத்த தயாரிப்பாளர் தரப்பு

    அதில், 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி சம்பள உயர்வு குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இன்னும் சில சங்கங்களிடம் பேச்சுவார்த்தை முடியவில்லை. ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாத நிலையில் ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊதிய உயர்வு பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

    தயாரிப்பாளர் செயற்குழு கூட்டம்

    தயாரிப்பாளர் செயற்குழு கூட்டம்

    இதற்கு பிறகு இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் 02.05.2022 அன்று நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெப்சியுடனான ஒப்பந்தம் ரத்து

    பெப்சியுடனான ஒப்பந்தம் ரத்து

    தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஆகிய இருதரப்பினருக்கு மட்டுமே காலங் காலமாக புரிந்துணர்வு ஒப்பந்தமானது இருந்து வருகிறது. அந்த வகையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்ததத்தில் கடந்த 09.03.2022 இரு சாராரும் கையொப்பமிட்டார்கள். மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் செயல்பட்டதால் இரு அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 02.05.2022 முதல் ரத்து செய்யப்படுகிறது என்று செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

     தயாரிப்பாளர்கள் கொடுத்த ஷாக்

    தயாரிப்பாளர்கள் கொடுத்த ஷாக்

    மேற்படி தீர்மானத்தின் அடிப்படையில், 03.05.2022 முதல் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கெளரவ செயலாளர்களான ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் டி.மன்னன் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    Tamil producers council annonced that agreement between producers council and fefsi were cancelled. May 3rd onwards producers will decide that who to use for their work. Producers council's executive meeting held on yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X