»   »  விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்... எதற்காக..?

விஷால் தலைமையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்... எதற்காக..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"தமிழ் சினிமாவின் நலன் கருதியும், தமிழ்த் திரைப்பட முதலாளிகளின் நலன் கருதியும், தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கிற அதிரடியான முடிவுகள் அனைத்தும் முதலாளிகள் அறிந்ததே. அதன் அடிப்படையில், தற்போது தமிழ் திரைப்படத்துறையில் நிலவி வரும் பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டியிருப்பதால் நமது சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Tamil Film Producers Council convenes an all member meeting

இந்த ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வேலைக்காரன்' விவகாரம்:

கடந்த 14-ம் தேதி நாளிதழ்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் விளம்பரம் முழுப் பக்கத்திற்கு வெளியாகியிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க விதிப்படி கால் பக்கத்துக்கு மேல் எந்தப் படத்துக்கும் விளம்பரம் கொடுக்கக் கூடாது. ஆனால், அதையும் மீறி முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சார்ப்பில் எதுவும் தெரிவிகப்படாமல் இருந்தது.

 Tamil Film Producers Council convenes an all member meeting

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை மீறியதற்காக படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர். இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணமே இந்தப் பிரச்னை பற்றி விவாதிப்பதற்காக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

English summary
Tamil Film Producers Council convenes an all member meeting at ragavendra mandapam on august 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil