»   »  தமிழக அரசு - திரைத்துறை பேச்சுவார்த்தை... நடந்தது என்ன?

தமிழக அரசு - திரைத்துறை பேச்சுவார்த்தை... நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது.

Tamil Nadu govt - Film Industry talks on entertainment tax

ஜி.எஸ்.டி-யில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை தியேட்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இரட்டை வரி செலுத்தினால் சினிமா தொழில் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி கடந்த ஜூலை 3ம் தேதி முதல் 4 நாட்கள் தமிழகத்தில் ஒட்டுமொத்த திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனை அடுத்து தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை அமைப்பினர் ஜூலை 2ம் தேதி அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதில் எந்த முடிவும் எட்டப்படாததையடுத்து ஜூலை 3 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் டி ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோரை திரைத் துறையினர் ஜூலை 3ம் தேதியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில்அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் இது அரசுக்கு எதிரான போராட்டமல்ல என்று அறிவித்த தியேட்டர் உரிமையாளர்கள், ஜூலை 7ம் தேதி முதல் தியேட்டர்களை தாங்களாகவே இயக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று 3ம் கட்ட இறுதிப் பேச்சுவார்த்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது். தமிழ் படங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி நேரடியாக கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் திரையிடப்படும் பிற மொழி படங்களுக்கு கேளிக்கை வரி நிர்ணயிப்பது (அதிக பட்சம் 20%) கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரியை டிக்கட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று அபிராமி ராமநாதன் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

தமிழக முதல்வர் சென்னை திரும்பியவுடன் இம் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவித்து, அரசாணை வெளியிட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டும் கேளிக்கை வரி என்கிற விதி தளர்த்தப்பட்டு நேரடி தமிழ் படங்கள் எல்லாவற்றுக்கும் ஆகஸ்ட் 1 முதல் கேளிக்கை வரி விலக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒரு குழு பார்த்து வரி விலக்கு வழங்கும் நடைமுறை இனி இருக்காது. இதன் மூலம் தேவையற்ற செலவுகள், காலதாமதம், தவிர்க்கப்பட உள்ளது.

- ராமானுஜம்

English summary
Here is the details of the talk between the Govt of Tamil Nadu and Film Industry on entertainment tax issue.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil