Fat Man இல்ல ஸ்பெஷல் மேன்..கணவரை அணு அணுவாக கொஞ்சும் மகாலட்சுமி!
சென்னை : சீரியல் நடிகை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை அணு அணுவாக வர்ணித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் தனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் சுட்டக்கதை, நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் விடியும் வரை காத்திரு திரைப்படம் விரைவில் தயாராக உள்ளது.
இவர் திடீரென சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

திருப்பதியில் திருமணம்
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதும் காதும் வைத்தது போல் யாருக்கும் சொல்லாமல் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோவை ரவீந்தர் இன்ஸ்டாவில் வெளியிட்ட போது தான் இவர்கள் திருமண செய்தியே மீடியாவுக்கு தெரிந்தது.

வாழ்த்திய ரசிகர்கள்
இவர்கள் திருமண போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து சொன்னதைவிட, இந்த ஜோடியை பார்த்து பலர் வயிறு எறிந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பணத்திற்காக நடைபெற்ற திருமணம் என்றும், மகாலட்சுமியை மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

வளைத்து வளைத்து பேட்டி
இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்த இவர்களது திருமணத்தை டிஆர்பி ரேட்டிங்கிற்காக பல சேனல்கள் பயன்படுத்திக்கொண்டு இவர்களை வளைத்து வளைத்து பேட்டி எடுத்தனர். இந்த ஜோடியும் கொஞ்சம் கூட நொந்து கொள்ளாமல் தங்களுக்கு இடையே காதல் வளர்ந்த கதையை சொல்லி சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர்.

இனி நோ பேட்டி
பல ஊடங்களுக்கு பேட்டி கொடுத்து களைத்துப்போன இந்த ஜோடி, இனி பேட்டி கொடுக்க மாட்டோம் என முடிவு செய்தனர். இருந்தாலும், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மனைவியுடன் இருக்கும் போட்டோ, மனைவிக்கு கார் பரிசளித்த போட்டோ, முத்தம் கொடுத்த போட்டோ என அவ்வப்போது போட்டோவை பகிர்ந்து இன்ஸ்டாவை தெறிக்கவிட்டு வருகிறார்.

ஸ்பெஷல் மேன்
இந்நிலையில், மகாலட்சுமி தனது இன்ஸ்டாபக்கத்தில் கணவருடன் டின்னர் சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.அதில், கேப்ஷனாக ''Sunday Special dinner with special man My Purusa'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பலர் இனி Fat Man இல்ல ஸ்பெஷல் மேன் என்றும் கணவரை இன்ச் இன்சா கொஞ்சுறீங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











