»   »  சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் மூன்று அணிகள் களமிறங்கியுள்ள நிலையில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகை நளினி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதால், நிர்வாகக் குழு முழுவதும் கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் சென்னை வளசரவாக்கம் திருமண மண்டபத்தில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

சங்கத்தை தோற்றுவித்த மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நடிகர் பானு பிரகாஷ், நடிகர்கள் சிவன் ஸ்ரீநிவாசன், ரவிவர்மா ஆகிய மூவர் தலைமையில் மூன்று அணிகள் மோதுகின்றன.

Televison actors union election today

69 வேட்பாளர்கள் போட்டி

தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர் உட்பட 23 பதவிகளுக்கு மொத்தம் 69 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில், சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்த 1,341 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.

Televison actors union election today

மூன்று அணிகள்

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல், சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர்.மஹாலில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.

புதிய அலைகள்

புதிய அலைகள் அணி சார்பில் தலைவராக பானு பிரகாஷ், துணைத் தலைவர்களாக மனோபாலா, சுந்தர், பொதுச் செயலாளராக பாபூஸ், பொருளாளராக விஜய் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Televison actors union election today

உழைக்கும் கரங்கள்

உழைக்கும் கரங்கள் அணி சார்பில் தலைவராக ரவி வர்மா, பொதுச் செயலாளராக எஸ்.கனகப்பிரியா, பொருளாளராக ஜெயந்த், துணைத் தலைவர்களாக லஷ்மி பிரசன்னா, வின்சன்ட் ராய் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

Televison actors union election today

வசந்தம் அணி

வசந்தம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசன், துணைத் தலைவர் பதவிகளுக்கு கமலேஷ், வி.சோனியா, செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், இணைச் செயலாளர் பதவிக்கு பரத், கவிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சங்கத்திற்கு நிதி

செயலற்ற நிலையில் இருக்கும் சங்கத்திற்கு நிதி திரட்டுவதும் மிகப்பெரிய சவால் என்கிறார் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பானு பிரகாஷ்.

டப்பிங் சீரியல் பிரச்சினை

டப்பிங் சீரியல்களைப் போலவே, சங்க உறுப்பினர்கள் அல்லாத புதுமுக நடிகர்களை மிக அதிக அளவில் தொலைக்காட்சிகள் பயன்படுத்துவதும் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக மூத்த நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மாலையில் வாக்கு எண்ணிக்கை

சின்னத்திரை கலைஞர்களுக்கு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவோம் என்று துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சோனியா தெரிவித்தார். இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Screen Actors Union Election held on today at Virugampakkam in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil