»   »  தமிழ்நாட்டில் இனி தெலுங்குப் படமும் ரிலீசாகாது!!

தமிழ்நாட்டில் இனி தெலுங்குப் படமும் ரிலீசாகாது!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரை உலகில் கடந்த ஒரு மாத காலமாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடாமலும் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சம்பந்தமான எல்லா பணிகளையும் நிறுத்தி வைத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இனி தெலுங்குப் படம் தமிழ்நாட்டில் ரிலீசாகாது!

போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தமிழ் திரை உலகிற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தெலுங்கு திரைப்படங்கள் எதுவும் ஏப்ரல் 8-ம்தேதி ஞாயிறு முதல் தமிழ் நாட்டில் வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Telugu cinema supports Tamil film producers strike

ஏற்கனவே ரிலீஸ் செய்து வெற்றி நடை போட்டு வரும் ராம் சரணின் 'ரங்கஸ்தலா'வும் அன்று முதல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திரை உலகின் நலனுக்காக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவால் தமிழ் - தெலுங்கு திரைப்பட உலகிற்கும் இடையே நட்பு மேலும் வலுவாக உதவும் என்றும் கருதப்படுகிறது.

English summary
Telugu cinema has announced that there will no release of Telugu movies in Tamil Nadu from April 8th

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X