twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “லைகர்’ தோல்விக்குப் பின்னால் சதி இருக்கிறது”: தெலுங்கு விநியோகஸ்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

    |

    ஐதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' திரைப்படம் கடந்த வாரம் 25ம் தேதி வெளியானது.

    பூரி ஜெகன்நாத் இயக்கிய 'லைகர்' ஸ்போர்ட்ஸ் ஜானர் பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது.

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'லைகர்' திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.

    விராட் கோலியின் பயோபிக்கில் விஜய் தேவரகொண்டா?: ஏன் இதுவர உடைச்ச ஃபர்னிச்சர் எல்லாம் போதாதா?விராட் கோலியின் பயோபிக்கில் விஜய் தேவரகொண்டா?: ஏன் இதுவர உடைச்ச ஃபர்னிச்சர் எல்லாம் போதாதா?

    லைகரின் தோல்விக்கு யார் காரணம்

    லைகரின் தோல்விக்கு யார் காரணம்

    விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' திரைப்படம், கடந்த வாரம் 25ம் தேதி வெளியாகி, மிகப் பெரிய தோல்வியடைந்தது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 'லைகர்' படத்தின் இந்த தோல்வி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் கதையும் திரைக்கதையும் அவ்வளவு சிறப்பாக இல்லையென்று மோசமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், படம் வெளியாகும் முன்பே பாய்காட் பிரச்சினையை சந்தித்தது.

    லைகர் வெற்றியை யாரும் தடுக்க முடியாது

    லைகர் வெற்றியை யாரும் தடுக்க முடியாது

    'லைகர்' ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, பாலிவுட் நட்சத்திரங்கள் பாய்காட் செய்யும் நெட்டிசன்களை விமர்சனம் செய்தார். இதனால் விஜய் தேவரகொண்டாவையும் நெட்டிசன்கள் பாய்காட் செய்யத் தொடங்கினர். ஆனால், அவர்களுக்கு சவால் விட்ட விஜய் தேவரகொண்டா நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். 'லைகர்; படத்தை யாரும் எதுவும் செய்யமுடியாது என பேசியிருந்தார்.

    விநியோகஸ்தகர் பரபரப்பு குற்றச்சாட்டு

    விநியோகஸ்தகர் பரபரப்பு குற்றச்சாட்டு

    'லைகர்' வெளியான பின்னர் மிகப் பெரிய தோல்வியடைந்ததும் திரையரங்க உரிமையாளர்கள் விஜய் தேவரகொண்டாவின் அட்டிடீயூட் குறித்து குற்றம்சாட்டினர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி விநியோகஸ்தரான வாரங்கல் ஸ்ரீனு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "சிலரின் நாசவேலையே லைகர் தோல்விக்கு காரணம் என்றும், படம் வெளியான பின்னர் அதை பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், படம் வெளியாகும் முன்னரே பாய்காட் செய்வது மோசமான கலாச்சாரம். இதனால், திரைத்துறையில் குறைவான சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கும்" எனக் கூறியுள்ளார். அதேபோல், விஜய் தேவரகொண்டாவின் பேச்சு குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.

    தயாரிப்பாளர் சர்மி விளக்கம்

    தயாரிப்பாளர் சர்மி விளக்கம்

    விநியோகஸ்தர் வாரங்கல் ஸ்ரீனுவின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் 'லைகர்' தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர்களில் ஒருவரான சார்மி. சில வருடங்கள் முன்னர் கிளாமரில் கலக்கி வந்த சார்மி, இப்போது திரைப்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், 'லைகர்' தோல்வி குறித்து பேசியுள்ள சார்மி, "ரசிகர்கள் வீட்டில் இருந்துகொண்டே நல்ல கதைகள் கொண்ட படங்களையும் பெரிய பட்ஜெட் படங்களையும் ஓடிடி தளங்களில் பார்க்கும் நிலை வந்துவிட்டது. அவர்கள் தங்களுக்கு பிடித்த படங்கள் வந்தால்தான் தியேட்டருக்கு வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

    ஏமாற்றம் தான் மிச்சம்

    ஏமாற்றம் தான் மிச்சம்

    மேலும், ".தெலுங்கில் சமீபத்தில் வெளியான பிம்பிசாரா', சீதா ராமம்' கார்த்திகேயா 2 படங்கள் மட்டும் தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளன.. இந்தப் படங்கள் 150 கோடியில் இருந்து 175 கோடி ரூபா வரை வசூலித்துள்ளன. தென்னிந்தியாவில் முன்பு போல இப்போதும் சினிமா மோகம் இருப்பதாகத் எனக்குத் தெரியவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் 'லைகர்' படத்தை உருவாக்க 3 வருடங்கள் ஆனது. பல கஷ்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிறகே படத்தைத் தயாரித்தோம். ஆனால், இப்போது ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Vijay Devarakonda starrer 'Liger' was a big flop. Distributor Warangal Srinu has said that the reason for the failure of Ligar is the sabotage of some people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X