twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாஸ்பிடலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள்..சினிமாவில் விமர்சிக்கப்பட்ட கான்செப்டை காப்பி அடிக்கும் சீரியல்

    |

    சென்னை: சினிமாவில் ஆங்கிலப்படத்தைப்பார்த்து ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள் காட்சியை அமைத்து காமெடியாக்கி விமர்சிக்கப்பட்டது பீஸ்ட் டீம்.

    அதையே காப்பி அடித்து நர்சிங் ஹோமை ஹைஜாக் செய்ததுபோல் காப்பி அடித்து சீரியலில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.

    சீரியல் பரிதாபங்கள் ஆட்டை கடித்து மாட்டைக்கடித்து இப்ப சரவதேச தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு வந்துவிட்டனர்.

    பீஸ்ட் பட பாணியை கையிலெடுத்த பாரதி கண்ணம்மா.. தீவிரவாதிகள் பிடியில் சிக்கும் பாரதியின் ஹாஸ்பிடல்! பீஸ்ட் பட பாணியை கையிலெடுத்த பாரதி கண்ணம்மா.. தீவிரவாதிகள் பிடியில் சிக்கும் பாரதியின் ஹாஸ்பிடல்!

     எதுதான் இல்லை இந்த சீரியல்களில்

    எதுதான் இல்லை இந்த சீரியல்களில்

    தொலைக்காட்சிகளில் சாதாரணமாக இருந்த நாடகம் அடுத்து தனியார் தொலைக்காட்சிகளின் பெருக்கத்தால் சீரியல் அளவில் முன்னேறி உள்ளது. தமிழ் சீரியலும், தொலைக்காட்சிகளும், தமிழ் மக்களையும், குடும்ப பெண்களையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் சீரியல்கள் நிறைய எதார்த்தமான குடும்ப பிரச்சினைகளை பெண்களின் முக்கியத்துவத்தை பேசியது. ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களை பேசியது. குழந்தைகளுக்கான விஷயங்களை பேசியது.

     வீட்டில்கூட பட்டுப்புடவை, பக்கா நகைகளுடன் உலாவும் பெண் பாத்திரங்கள்

    வீட்டில்கூட பட்டுப்புடவை, பக்கா நகைகளுடன் உலாவும் பெண் பாத்திரங்கள்

    நாள் செல்ல செல்ல சீரியல்களும் போட்டி போட்டு ஒவ்வொன்றாக தடம் மாறின. குடும்ப கதைகளை பேசுகிறோம் என்று முறையற்ற உறவுகளை சீரியலில் வைத்தனர். பெண்களுக்கு பெண்களே எதிரி போல் காண்பிக்க சாதாரண குடும்பப் பெண்கள் மிக நவீன கொலைகாரர்கள், அதீத திறமையுடன் செயல்படுவதுபோல் காண்பித்தனர். தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் பட்டுப் புடவையும், முழுநகைகளும் அணிந்து ஏதோ கல்யாணத்துக்கு செல்வது வீட்டில் நடமாடும் காட்சி இன்றும் வைக்கப்படுகிறது. கேட்டால் புடவை நகைக்காகத்தான் பெண்கள் சீரியல் பார்க்கிறார்கள் என்கிறார்கள்.

     பில்லி சூனியம், மாயமந்திரம் தான் சீரியல் கதையா?

    பில்லி சூனியம், மாயமந்திரம் தான் சீரியல் கதையா?

    கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டுவார் ஆனால் அவர் வீடு பங்களா போன்றிருக்கும். மாடர்னாக நவீன உலகில் வாழ்வார்கள் நவீன விஷயங்களை பயன்படுத்துவார்கள் ஆனால் பாம்பு வந்து பழிவாங்கும், பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றை முன்னிறுத்தி கதை, மாய மந்திர காலங்களை வைத்து கதைகள் நகரும். சீரியலுக்கான மூலக்கதை ஒன்றுமே இருக்காது. அவ்வப்போது ஸ்டுடியோவில் வந்து எதையாவது ரெடி செய்து எடுப்பது என்பது போல் சீரியல்கள் இருக்கின்றன. சில சீரியகளை பார்க்கும் ரசிகர்கள் ஏண்டா இதை முடிக்கவே மாட்டீர்களா என கேட்கும் அளவுக்கு இழுவையோ இழுவை.

     3 நாளில் முடிக்க வேண்டிய விஷயத்தை 3 ஆண்டுகள் இழுக்கும் சாமர்த்தியம்

    3 நாளில் முடிக்க வேண்டிய விஷயத்தை 3 ஆண்டுகள் இழுக்கும் சாமர்த்தியம்

    சமீப காலமாக சினிமா பாணியில் நம்ப இயலாத காட்சிகளை எடுத்து காமெடி பண்ணும் சீரியல்கள் நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுகின்றன. அதில் ஒரு சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஒரு பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் பின்னர் பிரிகிறார். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. ஆனால் அது தன் குழந்தை இல்லை என சாதிக்கிறார். இத்தனைக்கும் அவர் டாக்டர். நாயகனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தை இதுதான் என்று நிரூபிக்க நாயகி போராடுகிறார். டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து 3 நாளில் முடிக்க வேண்டிய சீரியல் 900 நாட்களுக்கு மேல் இழுக்கிறார்கள்.

     மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகள் தலைவன்

    மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகள் தலைவன்

    தற்போது இந்த சீரியல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுகிறது. காரணம் பீஸ்ட் படம், கூர்கா படம் போல் தீவிரவாதிகள் டாக்டர் நடத்தும் நர்சிங் ஹோமில் புகுந்து விடுகிறார்கள். அங்கு மத்திய அமைச்சர் அனுமதிக்கப்பட்டிருப்பார். அதுமட்டுமல்ல உள்ளே புகும்போதே 10 க்கும் மேற்பட்ட போலீஸார், அமைச்சரின் பாதுகாவலர்கள், எஸ்எஸ்ஜி அதிகாரிகள், 2 இன்ஸ்பெக்டர்களை சுட்டுக்கொன்றுவிட்டு உள்ளே புகுந்து நோயாளிகளையும், மற்றவர்களையும் பணயக்கைதிகளாக வைத்துக்கொள்கின்றனர். சொமேட்டோ டெலிவரி பாய் போல் இருக்கும் தீவிரவாதிகளின் தலைவன் 3 கோரிக்கைகள் உள்ளது அதை நிறைவேற்றும் வரை அனைவரும் பணயக்கைதி என்கிறார் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

     தீவிரவாத தாக்குதல் அளவுக்கு சீரியல்கள் முன்னேற்றம்

    தீவிரவாத தாக்குதல் அளவுக்கு சீரியல்கள் முன்னேற்றம்

    சாதாரணமான குடும்ப சீரியல்கள் தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் தீவிரவாத தாக்குதல் காட்சிகளுடன் மிரட்டல் விடுப்பதை பார்க்கும் நெட்டிசன்கள் ஏற்கெனவே சீரியல் போகும் அழகைப்பார்த்து கதாநாயகனான டாக்டர் பீஸ்ட் பட பாணியில் தீவிரவாதிகளை கொல்லப்போகிறார் என விஜய் கேரக்டரை போட்டு கிண்டலடிக்கின்றனர். இதுபோன்ற காட்சி பீஸ்ட் படத்தில் வைக்கப்பட்டு அதில் தீவிரவாதிகளை விளையாட்டுப்பிள்ளைகள் போல் விஜய் கையாளுவதை பெரிதாக கிண்டலடித்திருந்த நிலையில் அதேப்போன்ற காட்சி வைக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்படுகிறது.

     போலீஸார், என்.எஸ்.ஜி அதிகாரிகள் கொல்லப்பட்டது எங்கே

    போலீஸார், என்.எஸ்.ஜி அதிகாரிகள் கொல்லப்பட்டது எங்கே

    10 போலீசருக்கு மேல் சுட்டு தள்ளிய விஷயத்தை தொலைக்காட்சிகள் எதுவும் பேசாமல் நரசிங் ஹோமை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து வைத்திருப்பதை மட்டுமே பேசுவது செம காமெடி. அதைவிட அந்த தொலைக்காட்சியில் அனைத்தையும் மீறி மருத்துவமனையில் உள்ளே சிக்கியுள்ள கண்ணம்மாவையும், குழந்தையையும் மட்டும் ஜூம் செய்து காட்டுகிறார்கள். வழக்கப்படி என்.எஸ்.ஜி போலீசாரே எதிர்க்க முடியாத தீவிரவாதிகளை டாக்டர் தனியாக சென்று ரா ஆஃபிசர் விஜய் பீஸ்ட் படத்தில் முறியடிப்பதுபோல் அனிருத் மியூசிக்குடன் இருக்குமா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

     கவலையே படாத சீரியல் இயக்குநர்கள்

    கவலையே படாத சீரியல் இயக்குநர்கள்

    சீரியல்கள் சாதாரணமாக குடும்ப விஷயம் பேசுவதை தாண்டி தற்போது சர்வதேச, தேசிய அளவில் பயணிப்பது சீரியல் உலகின் அடுத்தக்கட்ட வளர்ச்சியா? ஏற்கெனவே பில்லி, சூனியம், பாம்பு, பல்லி பேசுவது, மோகினி என விட்டாலாச்சார்யா சமாச்சாரம், பழைய காலத்து ஏ.பி.நாகராஜன் சாமிக்கதைகள் பார்த்த பெண்கள் தற்போது பீஸ்ட், வலிமை ரேஞ்சுக்கு பயணிக்கும் சீரியல்களின் இயக்குநர்கள், கதைக்குழு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்பது மட்டும் உண்மை.

    English summary
    Netizens are criticizing the fact that scenes like terrorist attacks in cinema are now being shown in TV serials as well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X